முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
தேவநின் றிருவடிப்4 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

தேவநின் றிருவடிப்

3✓
தேவநின் றிருவடிப் பெருமையும் மகிமையுஞ்
சிவபிரான் றோள்களறியும்
செம்மைநிறை ஞானமுஞ் சாட்குண்ய பேதமுந்
திசைமுகன் றலைகளறியும்
மேவலர் துதிக்குநின் சௌரியமு மாண்மையும்
வெய்யசூ ரங்கையறியும்
மிளிர்கடைக் கண்ணருளு ஞானமுந் தீக்கையும்
வெற்பின்முனி நோக்கமறியும்
பூவலுறு பேரழகு நித்தநீ டிளமையும்
பூவாளி யங்கமறியும்
பொங்குபெரு வாழ்வுமா நந்தபோ கமும்புவி
புரப்பவன் சுதைகளறிவார்
மாவள ரருட்டிறமை தொண்டரறி வார்கொடிய
வன்னெஞ்சி னேனறிவெனோ
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...