முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
வாசுகியை முதலான9 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

வாசுகியை முதலான

8✓
வாசுகியை முதலான வட்டநா கங்களும்
மற்றையவி யாளமெவையும்
மறுகித் திடுக்குற்று நடுநடுங் கிக்கொடிய
வாய்கணஞ் சுமிழவிரையும்
ஆசுகமு மொப்பில்லை யென்னவரை நொடியிலே
யகிலலோ கமுமுலாவி
அண்டங்க ளாயிரத் தெட்டையுந் தனதுபெடை
யன்றீன்ற முட்டையெனவே
நேசமாய்ச் சிறகணைத் திடுமணித் தோகையந்
நீலக்கி ரீவமயிலை
நீண்முடிச் சேடனோ டண்டங்க ளுண்டுமிழு
நின்பராக் கிரமமயிலை
மாசறப் பணிக்கினென் மாயையா மரவுமுடி
வாய்ப்பிடித் துதறிடாதோ
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...