முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
அத்தநீ யெந்நாளு5 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

அத்தநீ யெந்நாளு

4✓
அத்தநீ யெந்நாளு மருள்பொழிந் தேவர்க்கு
மாநந்த போகமருளி
அழகில்வீற் றிருக்கவொரு திவ்விய க்ஷேத்ரமிங்
காக்கவெற் கருளவேண்டும்
பத்தியிற் சிரேட்டமுறு மாதவன் பத்திபோற்
பத்தியெற் கருளவேண்டும்
பத்தர்பல ரக்கோயி றன்னிடைச் குழுமியெப்
பாலுநின் றேத்தவேண்டும்
சுத்தமும் பத்தியுஞ் ஞானமும் வல்லகுரு
தொண்டங்கு செய்யவேண்டும்.
தோமிலாச் செய்கையிவை பூரணப் படினெளிய
தொண்டரேம் வாழ்வுபெரிதே
மத்தியுறு சூரியர்கள் பல்கோடி போன்றொளி
வயங்குபொன் மேனியுடையாய்
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...