முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
பொன்மழை பொழிந்தருள்6 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

பொன்மழை பொழிந்தருள்

5✓
பொன்மழை பொழிந்தருள் சுரந்திடு திறத்துநற்
புட்கலா வர்த்தமெனவே
பொதியுமெய்ஞ் ஞானப்ர சங்கமழை யூற்றியிப்
புவியினுக் கீசனியல்பு
நன்முறை விளக்கியுப தேசமருள் சீலனாய்
நண்ணுநற் பதவிவாய்ந்து
நாடுமுயர் பத்தியைச் சாதனையி லும்வைத்து
நம்மவர்க ளுய்திபெறுவான்
வின்மலி சிறப்புடைச் சமயதா பனஞ்செயும்
விறல்கொள வதாரபுருஷன்
வேண்டுமெங் குறையகல வுற்பவஞ் செய்யுமா
விடினினக் கென்னகுறைசீர்
மன்மலியு மாருதப் பிரவல்லி முன்னாள்
வயங்குபிர திஷ்டைசெய்த
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...