முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
உலகெலாந் நொடியில்வரு2 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

உலகெலாந் நொடியில்வரு

1ஆசிரிய விருத்தம்✓
உலகெலாந் நொடியில்வரு சித்ரக்க லாபமயி
லூர்திமே லிவருமுருகா
ஓங்கலொடு சூரனுட னீங்குமா றுருவுமவ்
வுரவுவே லேந்துமுருகா
அலகிலா லீலையாற் கோன்மகளு மான்மகளு
மார்வமுற வைக்குமுருகா
அடுதிறற் கோழிநின் றோங்கிய விறற்கொடிய
தைத்தகவு யர்த்துமுருகா
நிலவுசீ ரீராறு திருவிழியு மருள்பொழிய
நின்னாறு வாயிடத்தும்
நிகழவே புன்முறுவல் செவிமடுத் தருள்வையோ
நீண்டவிண் ணப்பமிதனை
மலைவிலார் மலைமக டமைந்தனே கந்தனே
வாரண முகற்கிளையவா
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...