முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
ஐயகலி யுகத்திலே11 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

ஐயகலி யுகத்திலே

10✓
ஐயகலி யுகத்திலே கண்கண்ட தெய்வநீ
யல்லவோ வடியரெல்லாம்
அருள்கலி யுகக்கடவு ளென்றடி துதித்துநின்
னருளெலா மடைதலுற்றார்
வையமிசை நின்புகழ்க ணாடொறும் பாடியும்
வரமுறப் பெறுகிலேனான்
வாடுமென் கவலையற நீயருட் டிருவுளம்
வையாத தென்கருத்தோ
செய்யநா னின்னடிமை யல்லனோ வல்லனேற்
றிருவுளம் பற்றன்முறையே
தெரியாத வன்போல மவுனமுற் றாயெனிற்
சீரருட் கீனமன்றோ
மையலற நீயருள்வ தில்லையே னிந்தைநினை
வந்தடையு மென்பதறிவாய்
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...