முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
ஊரின்றி யொருகுணங்3 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

ஊரின்றி யொருகுணங்

2✓
ஊரின்றி யொருகுணங் குறியின்றி வினையின்றி
யோதிடும் பெயருமின்றி
உன்னவொரு சார்பின்றி முன்னினொடு பின்னின்றி
யுற்பத்தி நாசமின்றி
நேரின்றி மேலின்றி யெப்படியு மளவிடா
நினையறிவி னாற்குறைந்த
நிலையினி லிருக்குநா மருடமைக் குறிகளா
னேமித் திறைஞ்சல்கருதி
ஆர்கின்ற முற்றறிவு முதலா றருட்குணனை
யாறுதலை யாக்கிவைத்தும்
அங்ஙனே மற்றைய குணங்களையு நற்குறிக
ளாலமைய வைத்துமதனால்
வாரொன்று கொங்கைமட வார்கணவ நின்னையே
வந்தித்து மருளவேண்டும்
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே....