முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
பறையுமெய்ப் பதினெண்பு7 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

பறையுமெய்ப் பதினெண்பு

6✓
பறையுமெய்ப் பதினெண்பு ராணத்தை யும்முனிவர்
பணியுஞான் றோதுகுருநீ
பரவுசீர்க் குறுமுனிக் கருளியே முடிமிசைப்
பாதம்வைத் திட்டகுருநீ
குறைவிலா முப்பத்து முக்கோடி தேவருங்
கும்பிட் டிறைஞ்சுகுருநீ
குடிலையின் பொருள்சொலாப் பிரமனைக்குட்டிமுற்
கொடியசிறை யிட்டகுருநீ
அறையுமவ் வகிலாண்ட கோடியும் பின்படைத்
தவனைமகிழ் வித்தகுருநீ
அமரர்முதல் யாவருந் துதிசெய்யு மீசற்கு
மக்குடிலை சொன்னகுருநீ
மறைமொழியு நன்னெறியி னொழுகிடச் செயவல்ல
வான்குரு வெனக்குமருளாய்
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...