முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
அந்தகன் வந்துயி11 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

அந்தகன் வந்துயி

10✓
அந்தகன் வந்துயி ரலைக்கின்ற போதெனக்
காருதவி செய்யவருவா
ரையனே யுனையன்றி வேறெவரு மில்லையுன்
னடியிணைகள் போற்றிசெய்தேன்
சந்ததமும் வந்தெனக் குபதேச மதுசெய்வை
சச்சிதா நந்தமுதலே
சற்குணா நந்தனே யற்புதப் பிரமமே
சகலகலை யோதுகுருவே
விந்தையா யுயிர்களைக் காக்குமொரு தெய்வமே
வேதவடி வானபொருளே
விற்பன விலாசமே மெய்ஞ்ஞான பானுவே
விண்ணவர் துதிக்குமுதலே
கந்தகுக மயிலேறி வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.