முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
உண்மையாய்ச் சமயங்க10 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

உண்மையாய்ச் சமயங்க

9✓
உண்மையாய்ச் சமயங்க ளுன்னையே போற்றியுன்
னருள்பெறற் கானபலவு
மோதியே நல்லவழி காட்டிமெய்ஞ் ஞானரச
முலகினுக் கூட்டுமெனினும்
மண்ணுலகர் தமதறிவு கொண்டுதம் மிச்சைபோல்
மாற்றியே போதிப்பதால்
மானிடர்க் கறியாமை நீங்கிடும் காலமினி
வருவதற் குறுதியுண்டோ
நுண்ணறிவு மெய்ஞ்ஞான மருள்தயவு பொறுமையிவை
நிறையவே பெற்றபெருமை
நீடித்த குருசர்வ சமயமா னிடர்க்குமுப
தேசமது செய்யவைப்பாய்
கண்ணற்கு மருகனே வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.