முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
எந்தவு ரெச்சாதி5 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

எந்தவு ரெச்சாதி

4✓
எந்தவு ரெச்சாதி யெச்சமய மென்னினு
மேதுமொரு பேதமின்றி
யெவர்நீதி பக்திவிசு வாசமிவை யுடையரோ
வவரையே சிஷ்யராக்கிச்
சொந்தமாய்க் காத்தவர்க ணின்றொண்டு புரிதல்போற்
றொண்டர்தந் தொண்டனாகிச்
சுகவாழ் வவர்க்குமிக வேண்டியே யாநந்த
சுத்தநிலை காட்டுகுருவே
இந்தவே ழைக்கருள் சுரந்திட விரும்புவா
யெப்போது மடிமையென்றே
யின்றுனது பாதமலர் வந்துமிகு மன்பாக
வேத்திநின் றேதுதித்தேன்
கந்தகுக மயிலேறி வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.