முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
அன்பனே நீசரெனை8 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

அன்பனே நீசரெனை

7✓
அன்பனே நீசரெனை வந்துவந் தணாப்பயா
னவர்களுரை மெய்ம்மையென்றே
யறியாமை யானம்பி வெகுமோச மாகினே
னாதலால் வந்தெனக்கு
முன்பிலே நின்றுனது கருணைபொழி கண்ணருளும்
முகங்களோர் மூவிரண்டும்
மும்மலங் களைநீக்கு முன்பாத தாமரையு
முன்னான்கு கைகளோரு
அன்பையு முபதேச மிதுவேளை செய்தெனக்
கறியாமை நீங்கநல்ல
வற்புதச் சமயமிது நிச்சயந் நம்பினே
னறிவுதரு மெய்த்தெய்வமே
கன்மவினை நீக்குபவ வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.