முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
உலகினி லுழன்றியான்2 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

உலகினி லுழன்றியான்

1✓
உலகினி லுழன்றியான் படுகின்ற துயரங்க
ளொருகோடி யுண்டுமெய்யா
யுற்றுதுணை நீயன்றி வேறில்லை யன்பனே
யுன்கழல்கள் போற்றிசெய்தே
னிலவுகாத் ததன்கனி யருந்துதற் கெண்ணியங்
கிருக்குமோர் கிள்ளைபோல
வெனதிதய மனுதினமு மிப்படி வருந்தவோ
வீசவுன் கிருபையிதுவோ
நிலவினொளி யெனவீசு கருணைபொழி கண்ணுடைய
நிமலனே நித்யவாழ்வே
நிர்க்குணா பூரணா வற்புதா னந்தனே
நிறைவான கிருபைமுகிலே
கலபமயின் மிசையேறி வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.