முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
மனமென்னு மலரிலே9 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

மனமென்னு மலரிலே

8✓
மனமென்னு மலரிலே யுனையா னிருத்திய
மன்பென்னு நன்னீரிலே
மாறிமா றிப்பண்பி னபிடேக மதுசெய்ய
மற்றுமென் கண்கள்வழியாய்க்
கனதாரை தாரையாய் நீர்பெருகி வழியவுங்
கசிவுகொண் டெனதுதேகங்
கடுவேர்வை கொள்ளவு மெய்ம்மறந் தயரவுங்
கன்மனங் கரைந்துருகவும்
முனதுபத மேயெனக் குதவியென வென்பொரு
ளுடலாவி யாவுமீந்தே
யொப்படைத் திடவுமுன் னருளெனக் கீகுவாய்
யோங்குமுயர் ஞானவொளியே
கனகமணி யணியுமொரு பாலசிவ சுந்தரா
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.