முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
பெலமோடு தைரியங்6 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

பெலமோடு தைரியங்

5✓
பெலமோடு தைரியங் குறையாத நற்சுகம்
பெறவெனக் கருள்கிடைத்தாற்
பிணிவறுமை நீங்கிடுங் கருணைபொறை சேர்ந்திடும்
புண்ணியஞ் செய்தல்கூடும்
நிலையான திடபக்தி யடியனான் கொள்ளுவே
னித்தமுன் சீரடிக்கே
நிறைவான பூசைசெப முதலான செய்துமே
நின்றுதோத் திரமுரைப்பேன்
தலமூர்த்தி தீர்த்தமிவை தமியேன் வணங்கியித்
தரணியோர் பெரிதுவக்குஞ்
சற்குருவை யண்டியான் முத்திநெறி கண்டிடச்
சமயமிது வாகுமையா
கலபமயின் மிசையேறி வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.