முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
அன்பில்லை யன்னையொடு7 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

அன்பில்லை யன்னையொடு

6✓
அன்பில்லை யன்னையொடு தந்தைசோ தரமில்லை
யயலில்லை யுறவின்முறையா
ராருமிலை யரியகுரு தானுமிலை நல்லகுண
மறிவுபொறை யாதியெல்லா
மென்மனத் திடைநிற்க வல்லவோ வில்லையே
யாதினிச் செய்வதென்றே
யெண்ணியென் னிருதயம் புண்ணாகி நோகுதே
யேற்றவழி காட்டிவைப்பாய்
சொன்னதைச் சொன்னபடி செய்யென்று சொல்லினுஞ்
சோருதே கன்மநெஞ்சஞ்
சொல்லாமல் விடவெனிற் பொல்லாமை செய்யுதே
சோலியிது சோலியிதுகாண்
கன்மவினை நீக்கவே வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.