முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
பஞ்சமா பாதகம்3 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

பஞ்சமா பாதகம்

2✓
பஞ்சமா பாதகம் வஞ்சகங் கொஞ்சமும்
பற்றின்றி யோடிவிடவும்
பற்றுள்ள தாய்தந்தை குருதெய்வ மிவர்களைப்
பக்தியொடு நேசிக்கவும்
நெஞ்சமிவ் வுலகினிற் சீவன்கள் பட்டுழலு
நெறிகண்டு நைந்துருகவும்
நின்பெருமை பேசிடுஞ் சங்கங்க ளங்கங்கு
நிலைபெற்று நீடிக்கவுஞ்
சஞ்சலம் தீரவே பரசமய நண்பருஞ்
சைவசித் தாந்தநெறியைச்
சரியாக வேர்ந்துமே மனுஜனன மெய்யென்று
சாதிப்ப தற்குமருள்வாய்
கஞ்சமல ரடிவள்ளி தெய்வானை காந்தனே
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.