முருகன் App
மாவைப் பதிகம்
க. சரவணாமுத்து
நிதியிலார்க் குணவில்லை4 / 11
மாவைப் பதிகம் · க. சரவணாமுத்து

நிதியிலார்க் குணவில்லை

3✓
நிதியிலார்க் குணவில்லை யயலில்லை யினமில்லை
நேசமது தானுமில்லை
நீசனுக் கறிவுபொறை தயவாதி குணமெலா
நிலைத்திங்கு நிற்கமாட்டா
நதிகடல்கள் தாண்டியே நற்றலங் கட்கேகி
நம்பனருள் பெறவுமாட்டேன்
நாயேனை வாட்டுமிக் கொடியநோய் நீங்கநா
னன்மருந் தறியமாட்டேன்
பதியையா னடைவதற் கானபுண் ணியமோடு
பத்திபெற் றடியனுய்யப்
பாக்கியந் தருகவென் றோலமிட் டலறினேன்
பண்ணவா வெற்குவேறு
கதியில்லை மயிலேறி வந்தென்னை யாளுவாய்
கர்த்தனே யுமைமைந்தனே
காரணா மாவைவா ழீஸ்வரா மந்த்ரவேல்
கைதனிற் கொண்டதேவே.