முருகன் App
மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
காப்பு1 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா

காப்பு

✓
ஓங்கார நாதமா யுள்ளுற் றுயிர்த்துவரு
மொருஞான விளைவ தாகி
உலகறிய நிகழ்கின்ற உற்பத்தி வடிவெலா
மொருதனது வடிவமாகி
நீங்காது மனசுபுரி சங்கற்ப மெழுதொறும்
நேர்நின்று விக்ன மாற்றி
நினைவினூ டொளிர்கின்ற நின்மல விநாயகனை
நித்தலும் பத்தி செய்வாம்
ஆங்கார மானவச் சூரனையு மயில்விட்
டழித்தவ னுளங்கி ழித்தே
யண்டருங் கொண்டாட வாடலொடு கூவல்புரி
யானந்த வடிவ மருளும்
பாங்கான வண்ணலைப் பழைமைதிகழ் மாவையம்
பதியுற் றமர்ந்த கோவைப்
பைந்தமிழ்க் குரவனைப் பரவுபிள் ளைத்தமிழ்
பண்புற் றிலங்க வினிதே.