மாவைப் பிள்ளைத்தமிழ்
மு. கந்தையா
சப்பாணிப்பருவம்5 / 11
மாவைப் பிள்ளைத்தமிழ் · மு. கந்தையா
சப்பாணிப்பருவம்
34✓
செக்கச் செவேலெனத் திசைதிசை யலைந்தோடு
சேயவொளி வட்ட நடுவுட்
செந்தா மரைப்பாத செவ்விவிர லகவிதழ்
செறிந்தபத் மாச னத்துப்
பக்கம் படுத்தணுகு பைந்தூவி யணைமிசைப்
பாங்குற விருந்து கொஞ்சும்
பச்சைப் பசுங்குதலை பனிமழலை பொழிவினுட்
பற்பாதி முத்து மொளிரப்
பொக்கம் புகாவன்பு பொலியவரு தாயர்மகிழ்
புண்ணியப் பொலிவு தோற்றிப்
பொற்றண்டை யரைஞாண் பொலங்குழை நலங்கொள்முடி
பத்மரா கப்ப வித்ரம்
‘தக்கத் தகவ்’வெனொளி சார்பிள்ளை யமுதமே
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
35✓
அன்றாதி சிவனருளு பொறிவடிவி லாறாகி
யணிசர வணத்தி லொன்றா
யணையுறு கார்த்திகைப் பெண்கள்முன மாறாகி
யம்மைவர மீள வொன்றாய்
ஒன்றாகி யொன்றினிற் பலவாமொ ராடலுன்
னுடனுற் பவித்த வழகே
உலகுயி ரனந்தத்து மவ்வவற் றியல்பாகி
யூடுநிறை யொருபொ ருள்நீ
யென்றாலு னருள்வர விருந்தவவ் வண்ணங்க
ளேழையே முணர வெளிதோ
விலங்குமுயி ரத்தனையு மீன்றுற வளர்த்துவரு
மீடில்பைஞ் சிசுவொ வொன்றுந்
தன்றாய ருள்ளமகிழ் சப்பாணி கொட்டநீ
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
36✓
சாரங்க பாணியருள் சார்ங்கபா ணிக்குரிசில்
சக்ரபா ணிக்கு மெட்டாத்
தானமுறு மாம்பழந் தந்திரியி சைப்பாணி
சாற்றுநா ரதன்கொ ணர்ந்து
சீரங்க மொளிரமழ லைப்பாணி யொழுகநிகழ்
திருக்குமர ரிருவர் முன்னே
சிவன்கரத் துய்த்தலுமி வுலகுவல மாகமுன்
சேருமவர் பெறுகவி தெனக்
கூரங்கு சங்கொள்மோ தகபாணி குரவரைக்
குறுவலம் வந்து வாங்கக்
கோபத்தி னதுபொறாய் குரவரை முனிந்துவெண்
கோவணந் தண்டு தாங்கித்
தாரங்க மொளிரநிகழ் தண்டபா ணிக்குழவி
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
37✓
வெள்ளிவா ரந்தொறு மிகுந்துநின் னாலய
விளங்குமுன் மண்ட பத்து
விளக்கொளி தழைத்திடு மருங்குநீ ளிருசாரல்
மேவுற விருந்து நின்சீர்
ருள்ளுலாம் பனிருதிரு முறையோதி யோவற
வுயர்திருப் புகழி சைத்தே
யுண்மையுள் ளொளிர்கந்த ரனுபூதி சொலவுன்னி
யுலகிதழி பொழுது மழியாக்
கள்ளமக லநிலத் தியல்பொடு கனிந்துவளர்
காண்வரு கமக்காரர் தாங்
கணியமொ டெடுத்தோச்சு கைத்தாள வொலியொடவர்
கனிகுதலை மதலைய ரிடுந்
தள்ளலா காதவிசை தழுவுகைப் பாணியொடு
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
38✓
முட்டப் பரந்துவான் முகடுற நிமிர்ந்துவிண்
மீன்றொகுதி யொப்ப மலரும்
முதிர்பொருக் குறுகோல முதுமைவடி வாயுறும்
மோட்டரை யிரும்பு ளிக்கண்
விட்டுப் பரந்துள விளர்தோ றுறத்துற்று
விதைசதை நரம்பி னொடுதோல்
வெவ்வே றறத்துன்றி யொன்றான காய்தனில்
விளைவுற முதிர்ந்து கனியாய்த்
தட்டதநு கரணமொடு புவன்போ கமுமாதி
தத்துவச் செறிவு முழுதுந்
தம்மிற் கழன்றவை தனக்குவே றாகவாழ்
தனித்துறவி நிலைமை தாங்கிச்
‘சட்டச் சடச்’சென் றுதிர்மாவை வருமுருக
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
39✓
ஊனமலி யுலகவாழ் வுல்லாச முத்தியென்
னுலகாய தன்னிற் கமே
வுயிரான பஞ்சகந் தக்கூட் டொருங்கழிதல்
முத்தியென் புத்த னிற்க
ஆனபிர கிருதிமுடி வணைபுருட னாதலே
யழிவிலா முத்தி யென்கோ
ளாதரி விவர்த்தமா யாவாதி யவனிற்க
வலர்வித்தை முத்தி யதுவென்
பானவனு நிற்கவுயர் கலைகால நாதங்கள்
பகருமவர் நிற்க விவையோ
பாசபசு ஞானவீண் பகடிகள் நானுளன்
பதிஞான வீடு மொருநான்
றானென்ன மார்தட்டு சாயுச்ய நாயகா
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
40✓
ஒருபுடை யிளம்வள்ளி வெண்கொடி துவண்டேற
வொளிர்வெற்றி லைக்கொடி யுமொன்
றொருபுடை படர்ந்தேற வொய்யார மாகநிமிர்
வுற்றில கிளங்க தலிகண்
டிருபுடையு மிளநலா ரெழுழ்வலித் தோடழுவ
வின்பமர்ந் தருளு செவ்வே
ளெம்பிரா னெமையருள வெளிவந்த பாங்கிதென்
றிறும்பூ தடைந்து வாய்மைத்
திருவுடைய கிருஷிவினை வேளாள ரவைதரூஉந்
தீங்கனி கிழங்கு மிலையுந்
தீண்டாது பக்தியொடு தெய்வவர்ப் பணமாக்கு
செம்மையொ டிலங்கு சைவத்
தருமநிகழ் மாவையிற் சார்ந்துவளர் நங்குமர
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
41✓
கட்டுகௌ பீனமு டொளிர்வருங் காவியுடை
கச்சையுங் கட்டி வடிவிற்
காணவுறு புண்டரங் கண்ணொளி விளக்கமாக்
கனத்தமணி ருத்தி ராக்கம்
பட்டுட லசைந்துறப் படரொளி முகத்துறப்
பழனியாண் டவர்கள் கோலப்
பச்சிளம் பாலரோர் பலர்கூடி மேவரப்
பாலகா வடியெ டுத்துக்
கொட்டுமே எம்முனுந் தட்டுதா எம்பினுங்
குதுகலச் சுதியெ ழுப்பக்
குதிகுதித் தெழுபாத கதிவேக வபிநயக்
கோலநிகழ் கூத்தி யற்றுந்
தட்டிலா வொத்திசை சலிக்காம லெந்தைநீ
சப்பாணி கொட்டி யருளே
சரவண பவானந்த சண்முக சிவானந்த
சப்பாணி கொட்டி யருளே.
42வேறு✓
சிட்டி புரிந்தல கிலவுயி ருனதடி
சேர்க்கு மமைப்புளவாந்
தெய்விக தநுகர ணாதிக ளுறவருள்
திருவிளை யாடல்கொலோ
கிட்டி யணைந்துன தருளுறு மநுபவ
கேண்மையி லாமுதியோன்
கீழ்கிளர் கயிலைய ணைந்திடு மெல்லை
கிடைத்தவன் பேர்விளியா
ஒட்டி யுலர்ந்துட லோய முதிர்ந்தினு
மோமுறு பொருளறியா
யொருசதுர் வேதமு ணர்ந்துள தெங்ஙன
மோதுக எனவுறுமிக்
குட்டி நெடுஞ்சிறை பிரமனை யிட்டவ
கொட்டுக சப்பாணி
கூரிலை வேல்கொடு சூர்பகை வென்றவ
கொட்டுக சப்பாணி.
43✓
இட்ட முறத்த னிராயிர பாணிக
ளெட்டுறு மட்டுமுறு
மீடில் குறட்சிறு பூதம னைத்து
மிமைப்பினில் வாயிலிடா
அட்ட மதர்ப்பொடு மணைவுறு மரிமுக
னாயிர மாசிரமு
மத்தனை கணைகளி லற்று விழுந்திட
வகமுறு பூதரெலாம்
முட்ட விரைந்து செவித்துளை வாயொடு
மூக்கு வழிப்படரா
முன்னுற மொய்த்து முகிழ்த்திடு கூத்திசை
முடிவுறு கைப்பாணி
கெட்ட நெடுங்கள மட்டு முடித்தவ்
கொட்டுக சப்பாணி
கூரிலை வேல்கொடு சூர்பகை வென்றவ
கொட்டுக சப்பாணி.
44✓
கோடு வியன்துடி கொட்டிட ரணபறை
கொட்டிட வெங்குமெழுங்
கோரநி சாசரர் நெஞ்ச மதிர்பறை
கொட்டிட வற்புதமுற்
றாடு மகப்பதி யரியய னாதிய
ரங்கைகள் கொட்டிடமே
வசுரர் மகேந்திர புரிமுழு தவலமொ
டாவலங் கொட்டிடமேற்
சேடு மிகுந்துள சேன நிரந்துறு
சிறையிணை கொட்டிடநேர்
சேணுறு மந்தர துந்துபி கொட்டிடச்
சிறுகையி லயிலேந்திக்
கூடு மருட்செரு வாடல் குறித்தவ
கொட்டுக சப்பாணி
கூரிலை வேல்கொடு சூர்பகை வென்றவ
கொட்டுக சப்பாணி.