முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
அவையடக்கம்1 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

அவையடக்கம்

✓
நேரிசை வெண்பா
கீரன் முதலோர் கிளற்று கவிதைமலர்
சேரப் புனைந்த திருமுருகன்-ஆரவிஃதோர்
புன்மலரென் றெண்ணிப் புனையாதி ரானுயரும்
தன்னருளி லேமலர்ந்த தால்.
குரு வணக்கம்✓
அறுசீர் ஆசிரிய விருத்தம்
தண்டமிழாம் பரவையிடை யாழ்ந்துசங்கத்
தமிழ்ப்பொருளாந் தரள மெல்லாம்
கண்டுமொழி யாலுவந்து கருணையுடன்
எடுத்தளித்துக் கலையின் மேலாம்
பண்டைஇயல் தெரித்தகத்தின் இருள்கடிந்த
பண்டிதப்பேர்ப் பட்ட மேய
திண்டிறல்சேர் பூபாலப் பிள்ளைதிருத்
தாள்கள்நிதம் சிந்தை செய்வாம்.