மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
சிறுபறைப்பருவம்9 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்
சிறுபறைப்பருவம்
71வேறு✓
சரவணப வக்குமர வரகரவெ னப்பகர
சதுர்முகனெ ழுத்தகலவே
சனனமர ணப்பிணித பனனெதிரு றப்பணிய
சலமகற லொக்கவருளும்
பிரணவம றைப்பொருளை யரனறிவு றப்புகலும்
பெருநெறிப டைத்தகுழகா
பிறைபொரும ருப்பொளிரு மொருகரமு கக்களிறு
பிளிறிமுன டுத்தசெயலால்
உரதனறி றத்துறவெ யினர்குலம டக்கொடியை
உரிமையொட ணைத்தமுதலே
உனைவழிப டத்தவறு மசுரர்குல முட்கியிதொர்
உகமுடிவெ னக்கருதவே
சிரமசைவு றத்திசைக ளதிரவுத தித்தொனியில்
சிறுபறைமு ழக்கியருளே
சிவநெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே.
72✓
கரியுரித ரித்தரவு நதிமதிப ரித்திலகு
கதிர்சடைவி ரித்துபுடையே
கரகமல மிக்கவியை வொடுசுழல்வு றக்கழல்கள்
கலகலவெ னக்குமுறவே
அரியுமறி தற்கரிய வொருபதமு யர்த்தியொரு
அடியுமிந் நிலத்திலுறவே
அமரர்பர வத்தவரு மகமகிழ்வு றத்துதிசெய்
தரிதரிதெ னப்பகரவே
பரிபுரமொ லிக்கவுட னடமிடுப ரைக்குமிதொர்
பரவசமெ ழுப்பவளுள்சேர்
பழமறைசி றக்கவரு கனகசபையிற் பெரிய
பதநடனம் ஆடும் இறையோன்
திரிபுவன முற்றுமிருள் கடிவுறவ ளித்தகுக
சிறுபறைமு ழக்கியருளே
சிவநெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே.
73✓
மகரசல திப்புவனி யகிலமும டக்கியெழு
மறநெறிசி தைத்தொழியவே
வளர்மதிக டுக்கவற நிலமிசைத ளிர்க்கவெழில்
வனிதையர்கள் கற்புமிகவே
குகரமலை யத்தமிழி னருவிபெருகிக் குமுறிக்
குவலையம னைத்துமுறவே
கொடியரெழி லித்தொனியி லரவுபுரை யத்தமது
குழுவொடுகு லைந்தொழியவே
பகரவெவ ருக்குமிக வருசிவம தத்தினியல்
பலதிசையு மெட்டிவரவே
பழமறைநி லைக்கதவ முனிவரர்சி றக்கவிளை
பழனமும ளிக்கபலனே
சிகரமலை யக்குறவ ரரிவையை யணைத்தகுக
சிறுபறைமு ழக்கியருளே
சிவநெறிப ரக்குமொரு பதிவருதி ருக்குமர
சிறுபறைமு ழக்கியருளே.
74வேறு✓
அகமார வைப்பசிச் சுக்கிலப் பிரதமையை
யாதிநா ளாயடுத்து
அறுநாளு மேபுனல்ப டிந்துபுல னைந்தையு
மடக்கியர விந்தமனைய
முகமாறு மேயுண் ணிறுத்தியிரு டிகளென்ன
மோனத்தி ருந்துவிரதம்
முறையே யனுட்டிக்கு மடவார்ப்பு ராணம்
முயன்றுகேட் டுயராலயத்
தகமா தரத்தொடுமி ருத்தல்போன்ம் மடைமருங்
கணியணிய தாய்க்குழுமி
யகலாது வெண்கொக் கினம்மழையில் மூழ்கியு
மடக்கமே பெரியதென்றிச்
செகமீ துணர்த்துமண் டூரறையு முருகநீ
சிறுபறைமு ழக்கியருளே
சிகரவரை மகளிதய மகிழவரு குமரனே
சிறுபறைமு ழக்கியருளே.
75✓
மன்றுளா டுஞ்சங்க ரன்சடா மகுடமிசை
மலரவன் மகவுமுனிவால்
மனமுடைந் துடல்தளர வந்தடைக் கலமென்று
வைகமற் றாங்கணுறையும்
கன்றுகோ பக்கனல் பிறக்கும் பணாவினைக்
கண்டுபின் னும்பயந்து
கவலையுற வேங்கரன் றன்கோ டெனத்துதிக்
கையினையுயர்த்தல் நோக்கி
இன்றுவா ணாள்முடியு மென்றுமெய் நடுங்குமுன்
இற்றகோ டிதுவன்றெனா
இயலுணர்ந் தகலநிலை கொள்ளுமதி குணிலதாய்
எந்தைகைத் துடியடிக்கச்
சென்றமா தவபால தில்லைமண் ரேனே
சிறுபறைமு ழக்கியருளே
சிகரவரை மகளிதய மகிழவரு குமரனே
சிறுபறைமு ழக்கியருளே.
76✓
மெய்யரந் தைப்படப் பாவமுன் னாள்செய்து
விளைவையெண் ணாதுஇந்நாள்
மெய்ந்நெறியு ணர்ந்துவெள் ளிலைவேல் பதித்துதெய்
வேந்திரன் மேனியென்ன
வெய்யதீ வினைகளுக் கீடாக வேவென்
விளங்குமுள் குத்தியீர்க்க
வில்லெறி மயிற்கலா பஞ்செருகி யொப்பில்பல்
வேறுபாற் காவடசுமந்
தையநின் சரணன்றி யின்றுவே றில்லையென
ஆலயம் வந்துபல்லோர்
அஞ்சலி புரிந்துநட மாடபண் பாடநல்
லருளமுத ளிக்குமெங்கள்
செய்யபன் னிருகரத் தில்லைமண் ரேனே
சிறுபறைமு ழக்கியருளே
சிகரவரை மகளிதய மகிழவரு குமரனே
சிறுபறைமு ழக்கியருளே.
77✓
என்புதோல் போர்த்தஉட லுட்குழிவி ழுந்தொளி
இழந்தவிழி என்றுமானா
எரிவடவை யொத்தபசி யோடலம ருங்கொடும்
இடாகினிப் பேய்களெல்லாம்
இன்பொ டுதிரங்குடித் தெல்லையில் நிணக்கூழை
ஏப்பமுற வாரியுண்டு
எம்பசி தணித்தகுக னார்வாழ்க வாழ்கவென்
றெங்குந் துணங்கையாட
வன்புரசு ரப்படைகள் மலைகுவிந் தாங்குகள
மருவவுதி ரக்கடலினுள்
வலியபடை தொட்டுவிண் ணவர்சிறையு மீட்டுவா
னுலகுகுடி யேற்றுவித்தாய்
தென்பொதிகை முனிவனுக் கன்றுதமி ழோதினாய்
சிறுபறைமு ழக்கியருளே
தெங்குகமு கெங்குமுயர் தில்லைமண் ரேனே
சிறுபறைமு ழக்கியருளே.
78✓
சந்தன நறுந்தழை யுடுத்துமெல் லிடையினிற்
சாருமே கலையதாகச்
சண்பகம் மல்லிகை குராமலர்க ளோடுபல
தளிர்களும் பெய்துகட்டிக்
கந்தமுறு சுனைமலர் அணிந்துசந் தனமுடன்
கஸ்தூரி புனுகுசாத்திக்
கழைமுத்து மணிவடம் பூண்டுவளை பாடகம்
கல்லென் றொலிக்க நின்று
சந்ததந் தொண்டக முழக்கிஅர மகளிருந்
தலைகுனிய மயில்களெல்லாம்
சாயல்பயி லக்குறிஞ் சிப்பண் ணிசைத்தெயினர்
தையலர்கள் குரவையாடச்
சிந்தையிலு வந்துமகிழ் வெய்துமுரு கேசனே
சிறுபறைமு ழக்கியருளே
தெங்குகமு கெங்குமுயர் தில்லைமண் ரேனே
சிறுபறைமு ழக்கியருளே.
79✓
சக்கரமெ டுத்திரவி கதிரினைம றைத்துத்த
னஞ்சயனை யாண்டமுதலான்
தன்னறப் போர்ச்சயப் பேரிகைமு ழக்கநின்
தந்தைமுப் புரமெரித்துச்
செக்கருறு மிந்துச் சடாடவியு மாடநற்
றிண்டிமமு ழக்கவின்னல்
செய்கயமு காகூரனை வென்றுகரி மாமுகச்
செம்மல்பே ரிகைமுழக்கத்
தக்கனைமு டித்ததுணை வன்முழவ டித்திடச்
சமரில்வெஞ் சூரைவென்ற
சத்ருசங் காரவோங் காரநின் வெற்றிமுர
சார்த்திடத் தாழ்த்தலேனோ
திக்கயமு ழக்கெனவொ லிக்கமண் டூரேனே
சிறுபறைமு ழக்கியருளே
திசைமாமு கன்றனை முனிந்துசிறை யிட்டகுக
சிறுபறைமு ழக்கியருளே.
80✓
அட்டதிக் குஞ்செவிடு படவசுரர் கிடுகிடென்
றலமரவு ணர்ச்சிவெள்ளத்
தமரர் மூழ்கிக்கரங் கூப்பிமெய் விதிர்விதிர்த்
தானந்த நடனமாடி
இட்டநித் தியபோக மெய்தினோ மின்றொடெம்
இடும்பையெல் லாமறந்தோம்
எனவார்த்தி டத்தரும தேவதை களித்துநின்
இணைமலர் துதித்துநிற்கத்
துட்டநிக் கிரகம் புரிந்தருள்செய் சிவகணஞ்
சூழநல் வஞ்சிசூடிச்
சுடரயில் விளங்கபோர்ப் பறைமுழங் கித்திறற்
சூரனெயில் சென்றுடற்றிச்
சிட்டரைக் காத்தஉயர் தில்லைமண் ரேனே
சிறுபறைமு ழக்கியருளே
திசைமா முகன்றனை முனிந்துசிறை யிட்டகுக
சிறுபறைமு ழக்கியருளே.