முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
சிறுதேர்ப்பருவம்11 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

சிறுதேர்ப்பருவம்

91வேறு✓
பொருகாது ரங்கமணி யணியாக நின்றுஅமர்
பொரவா தரத்துமிகவே
புவிமாத கங்குளிர மறமாய்ந்தி டத்தருமப்
பொலிவே கதித்ததெனவே
வருமாதி ரங்களைவ றுறமேலெழுந் துகள்விண்
மணிதே சொழிக்கவயலே
மழையே கடுக்கவித விதமே வளைத்துசிலை
வரிநா ணிழுத்துவிடுபேர்
உருமே றெனப்பெரிய குருபூமியிற் சமர்செய்
உரவோன் றனக்குவிரைவே
உறுதீமை யுன்னியவ னுயவேர் கொடிஞ்சிரதம்
உலையா துருட்டியருளும்
திருமால்த னக்குமரு மகனா யுதித்தகுக
சிறுதே ருருட்டியருளே
திகழேர் நடத்துகழ னிகள்சேர் பதிக்குழக
சிறுதே ருருட்டியருளே.
92✓
குருவே யெனப்பரவு குறுமா முனிக்குமொரு
குருவாயு ரைத்தகுமரா
குறமா னிடத்துமயல் குறையாது நித்தமவர்
உறைகோயில் புக்கவதனால்
பொருவேல் நிகர்த்தவிழி மடவா ரெடுத்தசுடர்
பொலிதீப மங்கையொளிரப்
புலனே மயக்கியவர் நிலையே தளர்த்துமப்
பொழுதே கருத்திலுணரா
மருவே செறித்ததிரு மலர்வாய் சிரித்துநிறை
மதியோர் முகத்தினழகார்
மதவா ரணத்திறைவி யுறுமூடலைக் கடிது
மகிழ்வா யகற்றுமழகா
செருவே தணித்தஉயர் திறனே விளக்கியொளிர்
சிறுதே ருருட்டியருளே
திகழேர் நடத்துகழ னிகள்சேர் பதிக்குமர
சிறுதே ருருட்டியருளே.
93✓
சலமே மிகுந்தமகி தலமே லெடுத்துபல
சதகோடி யுற்றசனனஞ்
சகலா கமத்துமிக வரிதே யெனக்கருது
சடலந் தரித்தவதனால்
மலவே ரறுத்தரிய விழிநீ ருகுத்துதவ
வயவே லியைத்தளர்வற
வலமே நிறுத்தமன வயலே செழிக்கமறு
வறுஞான நற்பயிரிலே
நலமே கதித்தஉயர் கதிவீட ருட்கனியை
நவமா யளிக்குமுதலே
நவைதீர் கதிர்ப்பரிதி எழுமா ரதப்புரவி
நடையே தடுக்குமியலாய்ச்
செலவா னகத்தணவி வளர்கா பதிக்குமர
சிறுதே ருருட்டியருளே
செருவே தணித்தஉயர் திறனே விளக்கியொளிர்
சிறுதே ருருட்டியருளே.
94வேறு✓
மாதங்க வரைமார்பில் வரிவண் டலம்புமலர்
மாலைநின் றாடவுறுமா
வதனத் திலங்குவிழி கருணைப் பிரவாகம்
வழிந்தொழுக மகவானருள்
மாதங்க மாகமகிழ் வோடமர வனவேடர்
மடவரலு மருகிலார
மயில்மீதி லாரோக ணிக்குமுரு கேசநின்
வாயில்வந் தன்பரெல்லாம்
வேதங்க ளுங்கண்டி லாதஉன தளவிலா
வெற்றிக ளுரைத்துபலவாம்
வேறுவே றானவாச் சியமுழக்கிப் பவனி
வீதிவர வெண்டி நின்றார்
சீதஞ் செயுஞ்சோலை திகழுமண் டூரனே
சிறுதே ருருட்டியருளே
சிரமைந்த ருக்குமொரு குருமைந்த னேயரிய
சிறுதே ருருட்டியருளே.
95✓
வேதா கரத்தெழுத் தாணிகோ ணாதுதிறல்
விண்டுவின் தொழில்கெடாது
வெய்யசீற் றத்துருத் திரர்வினை கெடாதுசதுர்
வேதம் முழக்கறாது
போதார் தொடைப்புரந் தரனரசு கோடாது
புவியில்மனு முறைகெடாது
பொங்குதண் டமிழாழி தோய்ந்தறிஞர் பொழிகவிப்
பொலிவென்ன உயர்விசும்பு
மீதார் முகிற்குல முகுக்குமழை குறையாது
வெய்யவன் கதிர்தவாது
விஞ்சமைம் பூதங்கள் பிறழா தனைத்துமருள்
வெள்ளத் தியக்குமுதலே
சேதாம்பல் விரிசுனைத் தில்லைமண் டூரனே
சிறுதே ருருட்டியருளே
சிரமைந்த ருக்குமொரு குருமைந்த னேயரிய
சிறுதே ருருட்டியருளே.
96✓
பொங்குமலை கடலெனவெ ழுந்துமா யச்சமர்
புரிந்தவசுரப் படையெலாம்
புவிமிசை யுருண்டுசிதை வுண்டுபிண மலைகளாய்ப்
போகவாங் கவுண்ணொல்லை
நங்குல மினித்தழைத் தோங்கவுந் தேவர்மெய்
நடுங்கியின் னேயழியவும்
நவஅமிர்த சீதமந் திரகூட மீண்டியென
நவமணி யிழைத்தசெம்பொற்
துங்கவிந் திரமாய ஜாலரத மெனுமவன்
றூயநற் றேரையுய்க்கச்
சொன்னெறித வாதுமீண் டதுமுன்ன ரமரினிற்
துஞ்சின ரெழுந்துபொருவே
செங்கர முயர்த்தியது மீளா துரைத்தவா
சிறுதே ருருட்டியருளே
சிரமைந்த ருக்குமொரு குருமைந்த னேயரிய
சிறுதே ருருட்டியருளே.
97வேறு✓
அடுத்து மும்மல எயிலது தழலெழ
அமரர்கள் தினம்வாழ
எடுத்த விந்தைகொள் அரனது ரதமென
இசைமணி ஒலிஆர்ப்ப
கடுத்த வஞ்சகர் கயவர்கள் செவிபடக்
கதிகெட நின்றேங்க
உடுத்த செஞ்சுடர் உடைஒளி வீசிட
உருட்டுக சிறுதேரே
உழவில் திருநின் றோங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே.
98✓
செழித்த பைம்பொழிற் கரிமுக னுறுபதி
சிறந்திடு குடவீதி
பழித்த பேர்க்குமுத் திரையெறி சக்தியின்
பதிவளர் குணவீதி
அழித்து மறமதை அருளறங் காத்திடும்
அரிவதி வடவீதி
ஒழித்து நலியிருள் உனதொளி சுடர்விட
உருட்டுக சிறுதேரே
உழவி னால்திரு ஓங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே.
99✓
திரைக்கு ளங்கெழுந் தருளியு முறுபல
திசைகளு மருள்சோதி
விரிக்கு மற்புதத் துனதிணை மலர்தொழ
மிகுத்தனர் பலகோடி
விரைக்க டம்பல ரணிகுக னிததுதி
வெளிப்படு மெனஅன்பால்
உரைக்கு மன்பர்தம் உளங்கொள வந்துநீ
உருட்டுக சிறுதேரே
உழவி னால்திரு ஓங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே.
100✓
பரக்க நற்றமிழ் படிமிசை யாசறப்
பழமறை தினம்வாழச்
சுரக்க வொப்பில்பல் வளனொடு மாமழை
கொடுத்திடும் அறமோங்கக்
கரக்க வன்பிணி மிடிஇகல் தீவினை
கவலைகள் பொச்சாப்பு
உரக்க வார்த்திடும் புள்ளுயர் துவசநீ
உருட்டுக சிறுதேரே
உழவி னால்திரு ஓங்குமண் டூரநீ
உருட்டுக சிறுதேரே.
✓