முருகன் App
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்
வி. விசுவலிங்கம்
காப்புப்பருவம்2 / 11
மண்டூர்ப் பிள்ளைத்தமிழ் · வி. விசுவலிங்கம்

காப்புப்பருவம்

1திருமால்✓
பூவைப் பூவண் ணத்திறையைப்
பொற்றா மரைக்கட் புத்தேளைப்
புவனி புரக்க வரையேந்திப்
புயல்முன் றடுத்த புங்கவனைக்
கோவைக் கொவ்வைக் கனியதரக்
கோகன தப்பூந் திருமாலைக்
கொஞ்சிக் குலவும் பெருமானைக்
கூடிம லர்த்தாள் தலைக்கொள்வாம்
சேவைச் சைவ மாமகளைச்
சிறக்க வாமங் கொண்டுவருந்
தேச னருளீ ராறுகரச்
சேயோ னைஉம் பர்க்கெல்லாந்
தேவைச் சுருதிக் கெட்டாது
திகழ்மா மணியைச் செந்தமிழர்
சேருந் தில்லை மண்டூர்வாழ்
செவ்வேள் தன்னைக் காக்கவே.
2உமாபதி வேறு✓
வையக மலர்ந்தமலர் மாலையுங் கவிவாணர்
வாய்மலர்ப் பாமாலையும்
மார்பிடை வயங்கா வடியார்திமிர நீங்கவருள்
மாணொளிகொள் ஞானச்சுடரைச்
செய்யகம் முதலைந்து திணைவளஞ் சேரச்
சிறந்துபுக ழோங்குமண்டூர்ச்
சேயைச் சடாட்சரச் செம்பொருளை உமையீன்ற
செல்வக் குழந்தைவடிவைச்
செய்யபங் கயமல்லி செறிகங்கை அறுகிதழி
சேர்ந்துமிளிர் சடிலமுடனே
சிரமாலை யோடரவு சூடுமிய லானெய்தல்
சீர்வளஞ் சார்மருதமும்
துய்யநறு முல்லைசுர மும்நிலந் தோங்குவரை
துன்னிய குறிஞ்சிநிலனுந்
தொக்குகா சினியெலா மொன்றாய்த் துலங்குசீர்க்
சோமேச னார்காக்கவே.
3உமாதேவி வேறு✓
கனக வரையிடை சாரு மிளங்கொடி
கரிமு கனையருள் கார்கொ ணிறப்பிடி
களப நறியதண் ணாரம ணிந்தகில்
கமழு மளகநன் றாக வகிர்ந்தவள்
மனனில் நினைபவர் மாயை யகற்றுவள்
மறுவி லறுநெறி யாகவு நிற்பவள்
மலைய வரையனின் மாமக ணற்பத
மலரை யனுதினம் வாழ்த்தி வணங்குதும்
எனது குருபர னாக நறுந்தமிழ்
இனிது தெரிதர வேயரு ளீந்தென
திதய கமலமீ தேகுடி கொண்டவன்
இளைய சரவண மீது வளர்ந்தவன்
தினக ரருமெதிர் சேரி லொராயிரந்
திகழு மழகிலுந் தேசி லுயர்ந்தவன்
தினமு மருள்சுரந் தீயு நெடுங்கடல்
திருமு ருகனெனுஞ் சேய்ப்பு ரக்கவே.
கணபதி வேறு✓
சுருதிக ளொருநா லொடுமொரு சேரத்
துகளறு மிருடி சொற்ற சுவைக்கதை
தொகைபட வடமா வரையுய ரேடாத்
துரிசற வரையுந் தும்பி முகத்தவன்
சுலவிய கயமா முகவசு ரனினால்
துயருறு சுரரின் துன்ப கற்றினவன்
துணையென வணுகு மடியவ ரிதயத்
துதிமல ரணியுந் துங்கப தத்தினர்
பருதியு மதியும் புடைதனி லுருளப்
படியினை ரதமாக் கொள்ள மயத்தினிற்
பரமனு மகிழ வரமிக வருள்செய்
பதயுக நளினம் பரித்தவி தத்தினர்
பலகலை யுணரும் படிமுத லெவரும்
பரவுதல் பெறுநற் பண்பு சிறந்தவர்
பழமறை நுணுகி யளவிட வரிய
பரனடி இணைப ணிந்துவ ணங்குதும்
கருதிய கனகக் குழையசை யசையக்
கவுரிம டியிலி ருந்துத வழ்ந்தவன்
கவலகை ளகலக் கருணைகொ ணயனக்
கதிரொடு முருகக் காட்சி யளிப்பவன்
கதுமென வயபக் குரலொலி யெழவக்
கணமவ ணணுகிக் காத்துரட் சிப்பவன்
கனதன மடவா ரிருபுற மமரக்
கருமயி லூருங் கந்தனைக் கலையின்
குருமணி யருண கிரிபுக ழினிமை
குதியுறு கவிதை கொண்டு களிப்பவள்
குறமட மகளைக் குலவிட முதிருங்
குரலு றுதினையின் கொல்லையெல் லாம்மனங்
குலையவொ ரேயினக் குலமக னுருவிற்
குறுகிலெவ் விரகங் கொண்டு மொழிந்தவள்
குயமலை குழையத் தழுவிய குகனைக்
குமரனை யென்று நின்று புரக்கவே.
5கலைமகள் வேறு✓
வெண்டா மரைப்பூ வணைந்தபெரு மாட்டியிம்
மேதினி விளங்குகலைகள்
மேவிடத் தானே யுணர்ந்தவ ளுளங்கொள
விருப்புடன் வேண்டினோர்க்குத்
தண்டாம லீயுமியலாள் புலவர் நாவிடைத்
தாவற நிருத்தமிடுவாள்
தகுபரா பரிவாணி தண்டா மரைப்பதம்
தலைமீ துறப்பரவுவாம்
வண்டார் கடம்பார மணியும் பிரான்றெய்வ
வள்ளிகுஞ் சரிமணாளன்
வடியேறு மயிலோடு மயிலேறி நடமாடு
வரதனறு திருமாமுகன்
கண்டாரு மினியதமி ழோங்கிநா ளுஞ்சுவைக்
கவிமாரி பொழியுமண்டூர்க்
கந்தப் பிரான்மிசைக் கூறுசந் தத்தமிழ்க்
கவிநடை விளக்கமுறவே.
6அரிகர புத்திரர் வேறு✓
விரைக மழ்ந்துய ராரமும்
மிளிர மார்பினி லாரமும்
விரித ரும்புய வரைகளில்
விலகு றாதெழி லொழுகுசீர்
அரிய பூரணை யாரையும்
அழகு புட்கலை யாயையும்
அணைய வைத்திடு மரிகர
ஐய னாரடி பரவுதும்
கரையி லாவுரு ளூழியாம்
கதிரை மாநக ராளியாம்
கவினி லங்குதெய் வானையும்
கனக நூபுர வள்ளியும்
உரமி கும்பபுய மலைகளில்
உறவ ணைந்தக மகிழுமெம்
உமைதி ருக்குக னார்புகழ்க்
குரிய கவிதை தழைக்கவே.
7பகவதி வேறு✓
அரியே றுகைத்தகில லோகமுங் கைதொழு
தடைக்கலம் புகுநிற்கும்
அம்பிகை யறந்தழைத் தெங்குமொரு தானாகி
அடியவரை யாண்டசக்தி
திரிசூலி மதனவேள் படைமயக் காதவோர்
திறனேறு கன்னிவிமலை
செஞ்சடில முடிதாங்கி நின்றபக வதிசரண்
சிந்தையி னினைந்துதொழுவாம்
வரியேறு முழுவையுரி போர்த்தவர னார்க்குமுன்
மந்திரப் பொருளுரைத்து
மலைகள்தொறு மாடல்க ணிகழ்த்திதணி மாமலை
மகிழ்ந்தவடி வேன்மதலையைத்
தெரியாத தத்துவங் கொண்டகுரு தேசிகத்
தெய்வக் குழந்தைவடிவைத்
தில்லைமண் டூரினிலு வந்துவிளை யாடிவரு
சேயினைக் காக்கவென்றே.
8காளி✓
தில்லைநட மேவிசிவ னோடுமுட னாடிய
திருக்குமரி காளிநீலி
திரிலோக மும்புரந் ததர்மங் களைந்திடுந்
திரிசூலி சிந்தாமணி
எல்லையறு வீரிகலை யூர்தியிள வேய்புரையு
மெண்டோளி சாமுண்டியின்
எழில்கொணூ புரமரற் றும்மிணைக் கழல்களெம்
மிதயகம லத்தில்வைப்பாம்
சொல்லையுழ வோர்வயல்க டோறுநித் திலமலைகள்
தோன்றுமியல் போற்குவிக்கத்
துங்கமுறு மம்பிபல வணியணிய தாகநீர்த்
துறைகளிடை துன்னிமேவ
எல்லையறு பொற்பொதிக ளோடுவணி கர்க்குழஉ
ஏகிவிலை பேசிநெல்லை
ஏற்றுகம் பலைக்கள மேறுமண் டூருறையு
மிளமுருகனைக் காக்கவே.
9ஆதித்தர்✓
மேதினியி லந்தகா ரப்படல விருளகல
வேதிரைக் கடலொலிக்க
விண்ணுமண் ணும்பண்ணி சைத்துப் பராவகுண
வெற்பிடை விளங்கியயன
வீதிவயி னேழுபரி சேர்ந்ததனி யாழிரத
மீதுவரு மாசறுசுடர்
மேவும் பதங்கர்பொற் பாதங்கள் துணையென்ன
வேண்டியஞ் சலிசெய்குவாம்
சோதியுறு மிலைமுகப் பைம்பூண் டிருக்கரந்
தோன்றபுன் முறுவலித்துத்
தோகையர்க ளிருபுறந் தோயமர கதநிறத்
தோகைமயி லூருமுருகன்
நீதிவழு வானெறியி னோடுவறி யார்மகிழ
நித்தமு மளிக்குமியலோர்
நிலவுமண் டூரிலுறை சரவணக் கடவுளை
நிதமும் புரக்கவென்றே.
10முப்பத்து மூவர்✓
பொன்னார மார்பிற் றுலங்குவசு வெண்மரும்
புரயிலாச் சடைமுடித்த
புத்தேளி ராறிருவ ராதவ ருத்திரப்
புங்கவர்கள் பன்னொருவரும்
தன்னேரி லாததேவர்க் குரிமை யானசீர்த்
தகைமருத் துவரிருவரும்
தண்ணளியி னாலினிது காக்கவென் றவர்திருச்
சரணமா மலர்பரவுவாம்
பன்னாக முதுகுநெளி யப்பதந் தூக்கிநர்த்
தனமாடு பரமனருளும்
பாவையர் களிக்கமயி லேறிய பரப்பிரம
பன்னிருக ரக்குமரவேள்
நன்னாவ லர்க்குமொரு நாவலவ னானவன்
ஞானசம் பந்தமுதல்வன்
நனிவளங் கொண்டமண் டூருறையு மறுமுகன்
நம்புமடி யார்பரனையே.