முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
உரைக்கு நலங்க4 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

உரைக்கு நலங்க

3விருத்தம்✓
உரைக்கு நலங்க ளவைதுணியே
னொழிக்கும் பவங்கள் பலதுணிவே
னுகந்துன் முளரிப் பதம்பணியேன்
னொழியா மயலார் பதம்பணிவேன்
தரைக்கு ணினையான் புகழ்ந்தணியேன்
சாமி யெனையே புகழ்ந்தணிவேன்
றரிக்கு மருளை மிகக்கணியேன்
றனத்தைப் புவியை மிகக்கணிப்பேன்
வரைக்குங் கடிய மனப்பிணியேன்
வருந்தா திருக்க வகைகுணியேன்
வன்னி விழியான் றருமணியே
வள்ளி முன்ன ருறுகணியே
சுரக்கும் பசுக்க ளளிக்கவரை
தூக்கு மரிக்கு மருமகனே
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.