முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
மேக மின்ன3 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

மேக மின்ன

2விருத்தம்✓
மேக மின்ன னிலைத்திருந்து
மிளிருங் கால நிலையாத
மெய்யின் வாழ்வை விழைந்திருந்து
வீணிற் பொழுது கழிப்பேனை
மோக ரிக்குங் கடன்மணலை
முழுதுங் கணிக்க வியன்றாலு
முடிவு காணற் கரும்பிறவி
முழுகிச் சுழல்வுற் றலைவேனைப்
போக மங்கை மார்கசுகத்தைப்
புசித்துப் பணிவாய்த் தேரையெனப்
பொறிகள் கலங்கி யுழல்வேனைப்
பொருளா மதித்து வரமருளத்
தோகை மயிலின் மிசைவருநின்
சுகிர்த மிருந்த படியென்னே
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.