முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
உற்ற பிறவி6 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

உற்ற பிறவி

5விருத்தம்✓
உற்ற பிறவி தொறுமகலா
துருற்று பவப்பேய் பிடித்துந்த
வொழியாப் பிறவிக் கடல்விழுந்தே
னுடைகொ ளாசைத் திரையமிழ்த்தக்
கற்ற கபட மாதரெனுங்
கதித்த மகரங் கலக்கநொந்தேன்
கண்கண் முதலாம் பொறிச்சுறவங்
கடுகி யங்கு மிங்குமெனை
முற்று மிழுக்க வெதுசெய்வேன்
முழுதுங் கருணை யுருவாகி
முத்தித் துறையின் வழிகாட்டு
முளரி நிகர்நின் பதப்புணையைத்
துற்ற வருளிற் செலுத்தினன்றித்
துணைக்கும் வேறு துணைகாணேன்
றுதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.