முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
செய்ய வொண்ணாத்10 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

செய்ய வொண்ணாத்

9விருத்தம்✓
செய்ய வொண்ணாத் தீமைபல
செய்தே னென்னை நரகழுத்தித்
தீயி னுருக்கி வாயினுள்ளே
செம்பை வார்த்து விழியிரண்டின்
நைய முளைகள் பலவுறுத்தி
நாவைத் துண்டித் தூசிகளை
நகக்க ணெங்கு மிறக்குதற்கு
நாடி நின்றார் நமன்றூதர்
சைய வகத்தி னடுங்கியிதைத்
தரியேன் றரியேன் றரியேனாற்
றழலை நிகர்க்கு மவர்கையிற்
றப்பு விக்க விதுசமயந்
துய்ய தலத்தி லியாரியார்க்குந்
துயர மழிக்க வடிவுகொண்டோய்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.