முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
உலகு சிறப்பப்2 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

உலகு சிறப்பப்

விருத்தம்✓
உலகு சிறப்பப் பல்கதிரோ
னுததி யுதித்த தெனப்பசுங்கா
ருலவு மயிலின் மிசையேறி
யொளிகால் மணிப்பொன் முடிதுளங்க
இலகு குணங்க ளறுமுகமா
யியைந்த கருணை நிறைந்தொழுக
விராறு புயங்க ளிராறுவிழிக்
கிணங்கப் படையி னிரைவிளங்க
விலகு மொளிப்பூண் கலைதுலங்க
விரவு கழற்கா லிரண்டிலங்க
வேடர் மகள்வா சவன்புதல்வி
மிளிர்வேற் சத்தி யிவையோடுஞ்
சுலவு வினையேன் விழிவிருந்தாய்த்
தோன்றி யருளென் பிணிமருந்தாய்த்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.