முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
மலிந்து பரவு5 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

மலிந்து பரவு

4விருத்தம்✓
@todo add 2 missing lines
மலிந்து பரவு மகங்கார
மணந்த கல்லைப் பிளந்தகற்றி
விஞ்சு மௌன விதைபதித்து
விழும வன்பு நீர்நிறைத்து
மிழற்று மாயைப் பறவையொடு
விலங்கு பயிரை யழியாமல்
உய்ஞ்சு வரக்காத் ததன்விளைவு
முண்ண வொருநாள் வருவதுண்டோ
வுவந்து கனவி லெழுந்தேனு
மோதிக் கொடியேற் குறவருள்வாய்
துஞ்சி யறிவு மறுகுசிறைத்
துணையில் சயந்தன் கனவில்வந்தோய்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.