முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
பிள்ளைக் கறியை9 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

பிள்ளைக் கறியை

8விருத்தம்✓
பிள்ளைக் கறியை யுகந்தவற்கும்
பிறழா விமய கிரிமகட்கும்
பிள்ளை யெனநீ பிறந்ததற்கோ
பெரிது நெஞ்சங் கல்லாகி
யெள்ளின் றுணையு மிரங்காம
லெம்மா னெந்தை யென்றாயே
யென்று புகன்றே யிரந்தாலு
மெனக்கோ வருள வெழுதல்செய்யாய்
கள்ளின் கடம்பின் வண்டளிப்போய்
கவினு மயில்வா கனமுகைப்போய்
கமலத் தயனார்க் குரைமொழிந்தோய்
கடலில் வடிவேல் புகவெறிந்தோய்
துள்ளி யெழுந்த தகருகைத்தோய்
தொண்டர்க் கியானை மேல்வருவோய்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.