முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
ததைந்து மதுப்பாய்ந்11 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

ததைந்து மதுப்பாய்ந்

10விருத்தம்✓
ததைந்து மதுப்பாய்ந் தொழுகுமன
சலச மலரி லுனையிருத்தித்
தழைக்கு மன்பி னபிடேகந்
தவிரா தியற்றித் தமிழ்மொழியாற்
புதைந்து குவிய மலர்மாலை
புனைந்து தொழச்சற் றருள்புரிவாய்
புயல்கண் படுக்குந் தண்டலைசூழ்
பொய்கைச் சங்க மீன்றமுத்தஞ்
சிதைந்து கெடப்பா யிருள்சீக்கத்
தெளிந்த புனலே பாற்கடலாத்
திரையின் சுருட்டே யரவணையாச்
சிறந்த கமல வனம்பொறியாத்
துதைந்து விலைக ளுருவாமா
றுயிலும் பரங்குன் றாதியொடு
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.