முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
சோதி யெரியில்8 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

சோதி யெரியில்

7விருத்தம்✓
சோதி யெரியில் விளையாடித்
தூம வேள்வி முனிவர்விடச்
சுளித்த புலியோ டுத்தகரி
துணித்துத் தரித்தான் றோலுடையாப்
பாதி யுமையாள் வடிவனவன்
பயந்த மைந்த னாதலினாற்
பரந்த வெனது மனவனத்திற்
பகைத்த பெருங்கா மத்தீயுஞ்
சாதி சினப்பாய் புலியுங்கான்
றழங்கு களியென் னியானையுமே
தணவா துறைந்து வசித்தாலுந்
தனியா வருதற் கஞ்சாதே
சூத நிரையிற் குயில்பாடத்
தொழுது தொண்டர் குழாங்குடித்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.