முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம்
க. மயில்வாகனப் புலவர்
குளிரி னடுங்கு7 / 11
மயிலைச் சிவசுப்பிரமணியர் விருத்தம் · க. மயில்வாகனப் புலவர்

குளிரி னடுங்கு

6விருத்தம்✓
குளிரி னடுங்கு பனிக்காலங்
கொடிய கானத் திடையிரவிற்
குலவு புலியெண் கியானையரி
கொல்லும் பிறமா வலைந்துசெல
ஒளிரு மெரியிற் பிணம்வேவ
வுடங்கு வரும்பேய்க் கணங்களென்றே
யுள்ளம் வெருவ மழைதூற
வோவா துருமி முழங்கிமின
வளரு முள்ளிச் செடியுறைப்ப
மலைந்து கற்க ளடித்துறுத்த
வருந்து மவனிற் சதமடங்கா
மனது கலங்கி மறுகிடவோ
துளிருங் கமல விதிவகுத்த
தொகையார் தினங்க ளெலாந்தொண்டர்
துதிக்கு மயிலைப் பதிகொள்சிவ
சுப்ர மண்யப் பெருமானே.