மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
அம்புலிப்பருவம்8 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
அம்புலிப்பருவம்
61✓
ஒருபரம் பரனுக்கு மொழியொன் றுரைத்தனை
யொருநால்வ ருக்கு ரைத்து
வுற்றதொரு வடநிழலு கந்துறைதி நீயென்ன
யோதியோ தப்ப ரவைநீர்
பருகுகும் போதய முனிக்குமுத் தமிழையும்
பாலித்து மலையத் துநீ
பன்னிருவ ருக்கிசைத் தமருகென வேபணி
பணித்துப் பணிப்பா ரெலாந்
தெருளுமால் பாலரிய அட்டமா சித்தியுஞ்
சின்மயா நந்த நிலையுந்
தேருமெண் ணெண்கலையு நண்ணுவண் ணந்தந்து
சிவஞான தேசி கேந்திரற்
கருள்கரந் துதவியவ னுனைவரவ ழைத்தன
னம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
62✓
மீதுலா மமரருக் கமுதநீ யுதவுவாய்
வெய்யவே லேந்தி யிவனு
மேலிட்டு வல்லசுரர் கொள்ளைகொண் டுண்ணாமல்
வென்றிகொண் டமுதளிப்பா
னீதிலா னீயுங் கலாதர னெமக்கினிய
விவனுங் காலாத ரன்காண்
எம்பிரான் மகுடமணி நீயிவனு மவனுக்
கிரத்னது டப்பி ரபைகாண்
காதலா னீயுமலர் காவிக் குகந்தவன்
கங்கைநங் கைக்கு மிமைய
கன்னிக்கு மகவா னிவனுந் திருத்தணிக்
காவிக் குகந்த வன்கா
ணாதலா லிவனுக்கு நிகராவை நீயிவனோ
டம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
63✓
ஓகையா லிங்குவந் தனையாகி னுன்னுடைய
வொழியாத விரவொ ழிப்ப
னூதுலைப் பொங்குகன லென்னநெடு மூச்செறிந்
துரகனெயி றூன்ற வருநா
டோகையா லதுவுந் துரப்பனுன் னுடலுற்ற
துகளையுந் துகள்ப டுப்பன்
சூல்கொண்ட தேனிறா லெனவிவன் மலைக்குறவர்
தொடராம லுந்த டுப்பன்
வாகையால் வரைமத்து நட்டுநடு தறியாக
வையாம லுய்யும் வண்ண
மதுகைமா துலனுக் குரைத்தற்கும் வல்லவன்
மற்றவர மும்பெற லுமா
மாகையால் வருவதே கருமம்வடி வேலனுட
னம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
64✓
நானாலு கலைதனக் கதிபநீ யிவனுற்ற
நானாக லைக்கு மதிபன்
நளினங்கள் குவியநீ வருவையிவ னமரர்முக
நளினங்கள் மலர வருவா
னானாலு முடலத்து மறுவுண் டுனக்கெம
துயிர்க்குமுயி ராகு மிவனுக்
கொருமறுவு மின்றாகு மன்றியுங் கூரெயிற்
றூரகமுனை வந்து தொடருந்
தேனாலு நீபச் செழுந்தெரிய லானிவன்
சிகிவாக னங்கா ணலுந்
திசைதிசை முறிந்தோரு மாகையா னீயெங்கள்
செல்வனுக் கிணையல் லகா
ணானாலும் வருகவென வுனையழைத் தனனிவனோ
டம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
65✓
செய்யநிற முடையதுட் டரிகுரற்கா லாயுதச்
சேவலங் கொடிவி சும்பிற்
சிந்துவெண் பொரியெனத் தாரா கணங்களைச்
சிதறக் கொறிக்கு மன்னா
ணொய்யமதி யாமுனையு நூக்கியது நுகர்தற்கு
நோக்கினு நோக்கு மன்றி
நொடியினுன தொளிகெடப் பருதியைக் கூவுகென
நுவலுவது மருமை யன்றால்
வெய்யகத ழெரிகதுவ நீயுற் பவித்திட்ட
வேலைவட் டப்பு ணரிமேல்
வெங்கால தண்டமு நடுங்கிமுன் புகலஞ்சும்
வேல்விடுப் பினும்வி டுக்கு
மையனிவன் வெகுளுமுன் வருவதே காரியம்
அம்புலீ யாட வாவே
அணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
66✓
இந்திர னல்லைநீ நாபியம் போதினி
லிருந்துலக மீரே ழையு
மீன்றநான் முகனல்லை யன்னவனை யுதவியுனை
யெறிகடல் கடைந்த ஞான்று
மந்த்ரகிரி மத்தென நிறுத்திடுந் தறியாக
வாசுகி பிணித்தி ழுத்த
மாலவனு மலையிவனை யொருமொழி வினாவிய
மகதேவ னல்லை நீயோர்
சந்திர னுன்னையிச் சங்ராம வேலவன்
றண்டிப்ப தருமை யன்றால்
சந்ததமு மங்களா காரமா கியநந்
தமக்குவழி பட்டொ ழுகுவா
னந்தரத் திரிவனோ வெனவரவ ழைத்தன
னம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
67✓
முன்னவன் கடலைபொரி யவல்முதிரை யெள்ளுண்டை
முக்கனிக் குவை சர்க்கரை
முக்கிய மகோதரன் பூதரம் பொருவேழ
முகவன்விக் கினமெ வைக்கு
மன்னவ னுன்னைவெஞ் சாபமிட் டதுதன்னை
மாற்றுதற் கின்ன முந்தான்
மாட்டாது புவியெலாங் கண்புதைப் பக்ககன
வட்டத் தலைந்து திரிவா
யின்னவன் பின்னவ னென்பதுந் தெரிவைநீ
யிருமூன்று வதன மெய்து
மெங்கள்குல மதலைக்கு நின்மீது கோபம்வரி
னெவரே தடுக்க வல்லா
ரன்னவை செய்வதிவ னுக்கருமை யன்றுகா
ணம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
68✓
கொண்டதொரு மறுவின்றி நிறைவின்றி னாளுமே
குறைவின்றி வாள ராவின்
கூரெயி றுகுக்கும்வெங் காளகூ டத்தினாற்
குலைகுலைந் துலைவ தன்றி
மண்டலமும் விண்டலமு மிரவொழிய தொழியாத
மலதிமிர படலத் தொடும்
வல்லிருளை யுந்துரந் தடுவதொரு மதிபிறிது
வரவழைப் பினும ழைப்பன்
புண்டரிக னைச்சிறையி லிட்டுநெட்டுததியும்
பூச்சக்ர வாள கிரியும்
புரதகன ருத்ரகோ தண்டவே தண்டமும்
புதிதினவ கண்ட வைப்பும்
அண்டமு மகண்டமுந் தரவும்வல் லவனிவனோ
டம்புலீ யாட வாவே
யணிபெற்ற மயிலைவரு முருகசர வணபவனோ
டம்புலீ யாட வாவே.
69வேறு✓
கலையெ லாமுணர் நிபுண னற்றமிழ்
கருணை தந்தருள் குமரவேள்
கமல யோனிதன் முடிபு டைத்திடு
காத லன்குக னிகரிலா
னிலவ வாயிதழ் ஒருகு றத்தித
னிருத னங்களின் முழுகுவோ
னிரவி யாயிர முடியு தித்தென
வெழில்பெ றுந்திரு வுருவினா
னுலைவி லாதெழு புவிய ளித்தரு
ளுமைப ரம்பரை யருளுவோ
னுததிபோ லிரு கௌளின் மைக்கட
லொழுகு மைங்கர னிளவலான்
மலைக ணாயகன் வரவ ழைத்தனன்
வருக வம்புலி வருகவே
மயிலை வேலவன் வரவ ழைத்தனன்
வருக வம்புலி வருகவே.
70✓
தடம கோததி கதற மத்தெறி
தருசு ரும்புயல் மருகனேழ்
சலதி யோடெழு தகுவ மைக்கட
றடிய வந்தருண் முருகவே
ளிடப கேதன னுதவு புத்திர
னெளிய னன்பையு மகிழுவோ
னிசைவ லார்துதி புனையும் வித்தக
னெதிரில் வென்றிகொ ளடலினான்
கடக மாமணி வெயிலெ றித்திடு
கனக வண்புய னுலகுசூழ்
கலப மாமயின் மிசையு தித்திடு
கதிரவன் பொரு திரைகுலாம்
வடப கீரதி மகன ழைத்தனன்
வருக வம்புலி வருகவே
மயிலை வேலவன் வரவ ழைத்தனன்
வருக வம்புலி வருகவே.