மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சப்பாணிப்பருவம்5 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சப்பாணிப்பருவம்
32✓
இந்திரன் கனிவந்து வந்தனை புரிந்தன்பி
னென்னாளு மலர வென்ன
விந்தீ வரஞ்சுனைத் தந்தீ வரம்பெற்ற
விசைபெறு திருத்த ணியினு
மந்தரந் தொடுசிகர வொருபரங் குன்றினு
மலைவா யினுஞ்சி றந்த
வாவினங் குடியினு மேரகந் தன்னினு
மருவிபாய் குன்றந் தொறும்
சிந்துரந் திரிசோலை மலையினு மயிலையுஞ்
செம்பொன்மால் வரைய கத்துஞ்
சிவஞான தேசிகன் சிந்தையினு மெளியனேன்
சேர்த்ததமிழ் மாலை தனிலுஞ்
சந்ததங் குடிகொண்டு பணிகொண்ட வருளாள
சப்பாணி கொட்டி யருளே
சமரபிணி முகவலவ குமரசர வணமுருக
சப்பாணி கொட்டி யருளே.
33✓
வானவரு மிந்திராணி முலைபாய மடல்விண்ட
மந்தார மாலை கமழ
மணிமார்பி னிந்திராதி யதிபதிக ளனைவரு
மகிழ்ந்துமலர் மாரி கொட்டக்
கானமரு மிருளோதி யரமாதர் கொங்கையிற்
கற்புரக் கலவை கொட்டக்
கலக்குமரி யாள்வலங் கொடடவழு தகுவியர்
கருங்கண்மழை மாரி கொட்ட
வூனமரும் வேல்முனை துளைத்தவழி யேயவுண
ரூரமுர மிகுவா குவு
மொழுகுசெங் குருதிநீர் கொட்டநூ றாயிரத்
தொன்பதிம ரொடுபா ரிடத்
தானைமுழு துங்கொம்மை கொட்டமயி லச்சயில
சப்பாணி கொட்டி யருளே
சமரபிணி முகவலவ குமரசர வணமுருக
சப்பாணி கொட்டி யருளே.
34✓
முனிவே படைத்தமர் துடங்குவல் லசுரர்படை
முதுகுதந் தோட்டெடுப்ப
முரிதிரைக் கடல்பசுங் குருதிமா னதிபாய்ந்து
முற்றும் பெருக் கெடுப்ப
பனிவேய் நிகர்த்ததோட் பண்ணம்ப ணத்தியிகல்
பயில்குரவை யாட்டெ டுப்ப
பாகசா தனனாடல் வேல்கொடி யெடுப்பப்
பழஞ்சுருதி தலையெடுப்ப
வினிமே னமக்கோ ரிடுக்கண்ணு மில்லையென
விமையவர்கள் வாழ்த்தெடுப்ப
வெதிரேறு சூரன்முத லவுணர்மணி மௌலிபா
ரிடமெடுப் பக்க ளத்துத்
தனிவே லெடுத்தகை கொடுமயில மலையதிப
சப்பாணி கொட்டி யருளே
சமரபிணி முகவலவ குமரசர வணமுருக
சப்பாணி கொட்டி யருளே.
35✓
வெண்டா மரைத்தவள வெள்ளிமண் டபமேவு
மெல்லியலை நாவில் வைத்த
வேதியனை வேதமுடி வோதுகென வோதியவன்
வெண்ணரைக் குடுமி பெயரக்
கண்டார் நகைப்பப் புடைப்பதற் கொருமுறை
கவித்துக் குவித்தொ ருமுறை
காவற் றினைப்புன மருங்கெய்தி யெய்திய
கடும்பசி தணிப்ப வன்போல்
வண்டாடு கொந்தளக பந்தரிடு குறமாதின்
வாயெயிற் றூற லேய்ப்ப
வாக்குசெந் தேனோடு பசியதினை மாவிற்கு
வாயூறி யேவிரித்த
தண்டாம ரைக்கைகொடு மயிலமலை யதிபனே
சப்பாணி கொட்டி யருளே
சமரபிணி முகவலவ குமரசர வணமுருக
சப்பாணி கொட்டி யருளே.
36✓
நந்துபொரு களமதி னறுஞ்சாந்து பூசியு
நாட்டமஞ் சன மெழுதியு
நல்கெனச் சிவுகம்பி டித்துவச் சிரக்கச்சி
னகைமணி முடிச்ச விழ்த்தும்
பந்துபொரு மிளமுகுள தனயுகுளம் வருடியும்
பணிமுத்த வடமணிந்தும்
பாதசா லத்தினொடு கிண்கிணி திருத்தியும்
பைந்தூசு தனைநெ கிழ்த்தும்
இந்துநுத லிற்றிலக மிட்டுரத் தினச்சுட்டி
யெழில்பெறத் தூக்கி யிட்டு
மினமலர் புனைந்துவரி வண்டோச்சி யுங்காத
லெயினர்குல மாதின் புறத்
தந்துமகிழ் பன்னிருகை கொடுமயில மலையதிப
சப்பாணி கொட்டி யருளே
சமரபிணி முகவலவ குமரசர வணமுருக
சப்பாணி கொட்டி யருளே.
37வேறு✓
தண்டமிழ் விரகன் பரனொடு வாதுசெய்
சங்கத் தமிழ்நிபுணன்
சகல கலாதர னிறைவ னுரைக்குரை
தந்தருள் நக்கீரன்
கொண்ட லெனச்சந் தத்தமிழ் மாரிபெய்
கொற்றவ னருண கிரிக்
கோமா னெண்டிசை யளவுநெ டும்புகழ்
கொண்ட வருட் செந்தேன்
அண்டர்தெள் ளமுதொடு முக்கனி யூற
லளவிவ டித்தென்ன
வணிபெறு கவிதர மாலிகை நீபத்
தலர்மா லிகையினுடன்
கொண்டணி பன்னிரு பொற்புய பூதர
கொட்டுக சப்பாணி
குக்குட கேதன மயில நிகேதன
கொட்டுக சப்பாணி.
38✓
தஞ்சென வடிதொழு மடியர் கிருபாகர
தற்பத கேமவருட்
சத்திய குணோதய நித்திய நிராமய
சகலக லாரிபுண
வஞ்சினு மாறினு மெட்டினு மூன்றினு
மைம்பத் தொன்றினுமே
வறியு நிரந்தர புனித புரந்தர
வதுல துரந்தரிக
மஞ்சென மாரி பொழிந்து திவாகரன்
வடிவா யொளிவீசும்
வானவர் தேனமர் பொற்பமர் கற்பக
மஞ்சரி சூடுமொரு
குஞ்சரி வல்லப வல்லி மனோகர
கொட்டுக சப்பாணி
குக்குட கேதன மயில நிகேதன
கொட்டுக சப்பாணி.
39✓
அமரவ னாமய வசுரம னோபய
வகிலத யாசீல
வபயவ ரோதய வசுரநி ராகுல
வனகநி ராதார
சமரசி காவல வதுலம காபெல
சதுரநி ராகார
தருணச டாதர தனையவு மாசுத
சதமக னாதார
பமரவி யாகுல சனனநி திரோதக
பரோ திரோதான
பரமகு ணாலய வருள்புரி லீலைய
பரகதி தானான
குமரகிரு பாகர திமிரதி வாகர
கொட்டுக சப்பாணி
குக்குட கோதன மயில நிகேதன
கொட்டுக சப்பாணி.
40வேறு✓
மணமல ரைங்கணை யொருமத னன்புடை
மைத்துனன் முத்தேவ
வரமென வன்றனை யயன்விட வன்றருள்
வைத்திட நற்சீல
நிணமலி வெம்படை யவுணர் பயங்கர
நெட்டயி னெட்டூர
நிலவுல கெங்கணு நொடியில் வலங்கொளு
நிர்த்த மயிற்பாக
விணரவிர் சிந்துர விரைகம ழுந்தொடை
யிற்பொலி பொற்றோள
வெயினர் தருங்குல மடவரல் சந்தத
மிச்சைகொள் பொற்பாள
குணதர சங்கர குருபர ரஞ்சித
கொட்டுக சப்பாணி
குமர நிரந்தர மயில பயங்கர
கொட்டுக சப்பாணி.
41✓
அருணை நிறம்பெறு முருக சவுந்தர
வத்தகை மெய்ப்போத
வருணை பரங்கிரி பழநி யுகந்தரு
ளற்புத வித்தார
கருணை வழிந்தொழு கறுமுக பங்கய
கற்பக நற்றாம
கவுரித னம்பொழி யமுதம ருந்திய
கட்டழ குப்பால
பரவிய வும்பர்கள் பகைகெட மண்டமர்
பற்றிய மற்போர
பழைய தொழும்பின னிவனென வந்தருள்
பதுமப தத்தேவ
குரவம ணங்கமழ் வரைபொரு திண்புய
கொட்டுக சப்பாணி
குமர நிரந்தர மயில பயங்கர
கொட்டுக சப்பாணி.