மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சிற்றிற்பருவம்10 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சிற்றிற்பருவம்
81✓
இவ்வா ற்றிவ தோவல்ல
வின்ப துன்ப மவையல்ல
விரண்டோ வல்ல வொன்றுமல
யிருளு மல்ல வொளியல்ல
முவ்வா ற்றிமண் டலமல்ல
மூலப் பகுதி யதுவல்ல
முடிவைம் பத்தொன் றெட்டாறு
மூன்றைந் திவற்றான் மொழிவதல்ல
செவ்வா ற்றியு மறிவல்ல
தேகேந் தியமு மல்லவெனச்
சென்று சென்றே யணுவணுவிற்
றேர்ந்து தேர்ந்து சிவஞானி
யவ்வா றறியுஞ் சீறடியா
லடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
82✓
கூறுஞ் சதுர்மா மறையனைத்துங்
குண்ட லினியு மாறாறாய்க்
கோதத் தத்துவ ராசிகளுங்
கொடிய பாசத் திரயங்களுடன்
வேறும் புகலத் துவாவாறும்
விளைந்த வின்ப வீடேழு
மேவு மட்ட சித்திகளும்
வியன்சத் திகளோ ரொன்பானுந்
தேறுஞ் சாக்கிர சுவப்னமுதற்
றிசைகள் பத்து மெட்டெட்டாய்த்
தெரிந்த கலைஞா னமுஞ்சமையச்
சிலுக்குங் கடந்தா தாரங்க
ளாறுங் கடந்த சீரடியா
லடியேஞ் சிற்றி லழியேலே
வனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
83✓
கும்போ தயமா முனிமௌலி
குலரத் னமதா யொருமுக்கட்
கோமான் மணிபெற் றிருமார்பிற்
குலவுஞ் சாம்பு நதவணியாய்ப்
பைம்போ தகத்தோன் சூடமணிப்
பங்கே ருகமாய்ச் சங்காழி
படைத்த முகுந்தன் றந்தொளிரப்
பதும ராக வங்கதமா
யெம்போ லடியர் தங்களுக்கு
மிந்திரா திபர்க்கும் வானவர்க்கு
மெல்லை போயச் சதுர்மறைக்கு
மெவர்க்கும் புகலா யிருக்குமுன
தம்போ ருகத்தாள் சிவப்பூர
வடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
84✓
பார முனக்கே யெனப்பணிந்து
பதபுண் டரிகந் தனக்கேற்ற
பணிகள் பலவு மினிதாற்றிப்
பசியின் வருந்தா வகைவிரைந்து
நேர மிகவுஞ் சென்றதென
நின்று செங்கை விரனெரித்து
நிலையுங் கதவு மில்லாத
நிலைசா லட்டிற் றொழில்புரியுந்
தார மெனயா மருகணைந்து
சமைத்த சிறுசோ றுனக்கிட்டுச்
சந்த னாதி கொடுத்தெமது
தருண வருண தனதடத்தி
னார வடமு மெடுத்தணிவோ
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
85✓
கொடிய கயமா முகனசுர
குலங்கள் சூழ வீற்றிருக்குங்
கொடிநீண் மாயா புரியல்ல
குமைக்குங் க்ரவுஞ்ச கிரியல்ல
மடிவி லடர்ச்சூர் பொருமடங்கல்
வதனத் திளவ லுடனுறையு
மாகங் கிழித்து வளரிஞ்சி
வஞ்ச மகேந்திர புரியல்ல
வொடிவில் பரிவா லெழுமுறையு
முனக்கே யடிமைத் தொழில்பூண்டே
முனையே யன்றிக் கனவிலும்வே
றென்று நினையே முலைபெய்த
வடிசில் பதம்பார்த் திழிச்சுமுன
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
86✓
நினைய வரிய வொருகுடிலை
நிமிடத் தளவிற் பலகோடி
நிற்ப ரில்லா தவுமாக
நில்ல தொகுத்து நிலவுலகின்
முனைய நெடுங்கால் கொடுத்திருகை
முட்டி வீணா தண்டநடு
மூரி விடங்க மினிதொழுக்கி
முரியாப் பழுவண் கழிநிறைத்து
வனைய நாடி நாடியெனு
மணிவார் கயிறு பிணித்திறுக்கி
மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசையின்
வைத்தெம் பொறிச்சா ளரம்வகுத்த
வனைய சிற்றி லதுவன்றா
லடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
87✓
மதுவுண் டறுகா லஞ்சிறைய
வரிவண் டினமே ழிசைமிழற்று
மணிச்சூ ழியக்கொண் டையினெமது
மாலை பரியத் தாதுவன்றி
விதுவு நாணு மொளிமுகத்தின்
மீதுநறிய சிவிறிநீர்
வீசித் துரந்தா யரும்பமுலை
மெலித்தே யார வடங்கொண்டாய்
கதுவு மிடையிற் சிற்றாடை
கவர்ந்தாய் சிலகைக் கண்புதைப்பக்
கைகள் பிடிப்பச் சிலசிலவாற்
கழுத்தின் முழுத்தி யுகிர்வைத்தா
யதுவும் பொறுத்தே மீதுபொறே
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ சிற்றி லழியேலே.
88✓
ஒன்று காத லுற்றவன்போ
லுகந்தே யெங்க ளுடனாடி
யொளிவெண் டரள வரிசிவிரைந்
துடினு வாரிக் கொடுதந்துஞ்
சென்று சாக மெனநீலச்
செழுமா மணிகள் சேர்த்திட்டுத்
திளைக்கு மிளவுப் பெனவச்சிரச்
சின்னந் தொகுத்துத் தந்தடுத்து
நன்று புரியும் பொற்பிதுர்க
ணயங்கொண் முதிரை யெனக்கொடுத்து
நல்ல வாறே பரிந்தடிசி
னாங்க ளமைக்கு முனஞ்சிதைத்தா
யன்று போல வின்றுபொறே
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
89✓
முன்னைச் சுருதி நான்கினுக்கு
முகநான் குடைய வொருவனுக்கு
முகுந்தன் றனக்கு மெட்டாத
முதல்வ னேயா னாலுமென்ன
வுன்னைப் பயந்த தாதைதன்னை
யொருவா றணுகி யெமதுகுறை
வுள்ள தெல்லா மறியவிரித்
துரைப்பே மவன்கேட் டுறானாகில்
மின்னைப் பொருவ வடித்தசுடர்
வேலா வுனக்கு முன்னவனாம்
வேழ முகனுக் குணர்த்துவோ
மீட்டு முறையிட் டுன்னுடைய
வன்னைக் குரைப்போ மினியமையே
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.
90✓
ஊரார் பெருவீ டிழைக்குங்கா
னுன்முன் னவனைத் தொழுதிழைப்பர்
உகந்து சிறுவீடி யாமிழைப்பி
னுனது சரணந் தொழுதிழைப்போந்
தேரா யதுவு மொருகுறப்புன்
சிறுமி மிச்சிற் றிணைமாநீ
தின்ற தனையா மினியறியத்
தெய்வ யானை தனக்குரைப்பேம்
பேரா யிரங்கள் பெற்றபிரான்
பெற்ற பிள்ளை யானாலென்
பெரிய விமயப் பேராட்டி
பெற்ற பெருவாழ் வானாலென்
ஆரா னாலெ னினிப்பொறே
மடியேஞ் சிற்றி லழியேலே
யனகா மயிலைக் கிரிமுருகா
வடியேஞ் சிற்றி லழியேலே.