மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சிறுதேர்ப்பருவம்11 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
சிறுதேர்ப்பருவம்
91✓
தொக்கிட் டெதிர்ந்தமர் தொடங்கிநிரு பகன்முதற்
சூரர்வெங் காமனாதி
தொல்லைப் பழம்பகையை யிதயரண களமதிற்
சூறையிட் டாடலிட்டு
நெக்கிட்ட விழமுட்டி வெட்டிவெட் டிச்சங்க
நிரைநிரை முழக்கவஞ்ஞ
னேராது முதுகிட்டு நின்றிடப் புருகுடி
நெறிப்பினால் வாகைகொண்டு
புக்கிட்ட முப்புவன வட்டத்தி னுங்கருணை
பொழிசெயத் தம்பம்நாட்டிப்
போதகன் சிவஞான தேசிகன் மும்மதம்
பொழியும்வே ழங்கள்கட்டுந்
திக்கெட்டு ஞானச்சக் கரமொன் றுருட்டிநீ
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
92✓
கரிசித்திர காயம்வல் லுளிகரடி புள்ளிக்
கவைகோட்டு மானிரும்பைக்
காச்சித் திருக்கியிட் டனமருப் பிரலையுடு
கண்டீர வாதிவெருவப்
புரிசித்திர மயில்கடவி வேட்டமேற் கொண்டுபுகழ்
பொம்மையினும் விளையாடவிப்
புவியுளோ ரனைவருங் கண்டுதொழ வந்துட்
புகுந்துவாழ் வுற்றகோலம்
பரிசித்த வளவில்வே திக்குமாக் குளிகையிற்
பாரெலாம் புனிதமாக்கும்
பாதபங் கேருகச் சதாசிவச் சிவஞானி
பங்கயக் கண்கள்குளிரத்
தெரிசித் துளக்கமல மலரவருள் வைத்தவன்
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
93✓
மேடத்தை யுள்ளிட்ட ராசியொடு புசனிட்ட
மிக்கவுடு ராசியுதிர
வெயில்விட் டெறிக்கும்ரவி மண்டலம் வெருக்கொள்ள
வெண்டிங்க ணடுநடுங்க
கூடத்திரி கூடத்தி னுடனண்ட கூடமுங்
குப்புரச் சக்கரவாளக்
குன்றமுங் கிடுகிடென வாயிரங் குடுமிவட
கோதண்ட சிகரமிடிய
வாடற் கொலைக்களத் தமராடு தானலாந்
தமரா யிரங்கவந்த
மாடவெஞ் சூரனு மஞ்சியே நெஞ்சுச
லாடவிசை கொண்டுகொத்திச்
சேடப்ப ணாடவிவ ணக்குசிகி ரதவலவ
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
94✓
கதறக்க ருங்கடற் சேறுபட வேயுண்டு
ககனவட் டத்தெழுந்த
காளமே கக்குலமு மீளக் குமட்டிக்
கனைத்தெதி ரெடுப்பவுடல
முதறப் பதைத்தவுணர் நடுநடுங் கக்கிரண
மோராயி ரங்கள்வீசு
முதையா தபக்கடவு ளுந்திங்கண் மண்டலத்
துடனுடுக் கணராசியும்
பதறத் தலைத்தலை கிடந்திருட் படலம்
பறித்தெறிந் தொளிபரப்பும்
பலவெறுங் கைரத்ன பந்தியென வான்மறுகு
படர்குப்பை சிற்றடியினாற்
சிதறக் கிளைத்தெத்து சேவற்ப தாகையாய்
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
95✓
துஞ்சோரி கண்விழித் தாடுமா யிரகோடி
துண்டமுண் டக்கவந்தஞ்
சொரிசோரி யுண்டாட வண்டாடு கற்பகத்
தொடைசூடி வந்து வீரர்
நஞ்சோரி யிதுவென்ன நகையாட மிகையாட
நாகப்ப ணாமௌலியும்
நானிலமு நெறுநெறென நெளியக்ர வுஞ்சகிரி
நகரக் கராசலமுகன்
நஞ்சோரி விழிக்கக்க மிக்கவே தண்டமு
மண்டமும் பொதிரெறிப்ப
வம்புரா சிகளஞ்சு றுக்கொள முறுக்கெயிற்
றடுசூர னாவியுண்டு
செஞ்சோரி கக்கியெதி ரேத்துமூ வடிவேல
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
96✓
பாவேந்தர் பாவுக்கு நிலையாது குவலயம்
பற்றாதெ னப்பரந்து
பாதாள மேற்றவும் வேதாள முற்றவும்
பருகவுங் குறைபடாது
மாவேந்தர் செங்குருதி யாறுபாய்ந் தோரேழு
மகரா லயஞ்சி வப்ப
வாசிதுண் டம்பட துண்டித்த தோவட்டம்
வட்டவா மையின்மிதப்ப
கோவேந்த ரசுரவன் குலவேந்தர் படுபிணக்
குன்றுகுன் றாகவீழக்
கூளியா டப்பத்திர காளியா டப்பசுங்
குடர்மாலை சூடும்வடிவேற்
றேவேந்த்ர லோகரட் சாபரண ரணதீர
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
97✓
சந்திரன் பல்வேறு தாராக ணங்கள்சூழ்
தரவிமா னத்துலாவச்
சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடுந்
தமனியத் தேர்செலுத்த
முந்தரன் பொருவிடையு கைப்பமா யோன்கருட
மூரிவா கனநடத்த
முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து
முக்கோடி தேவர்வாழ்த்த
இந்திரன் பொற்பமைய ரம்பையர் மணிக்கவரி
யிருபுடை யிரட்ட வொற்றை
யிளநிலா மதிவட்ட வெண்குடை கவிப்பவீ
ரிருமருப் புப்பொருப்பு
சிந்துரங் கற்பகா டவிகடவி வலம்வரச்
சிறுதே ருருட்டி யருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டி யருளே.
98✓
மையுலா மேகபந் தியுமிந்து ரேகையும்
வாரீச முங்காவியும்
வடியிட்ட வமுதமுங் குமுதமுந் தவளமும்
வாரமுழு மணியுசலுந்
துய்யபூ கமும்வேயும் யாழுமென் காந்தருளுஞ்
சுகதுண்ட முஞ்சுரும்புந்
துணையரும் புடனுறும் பதனொழுகு கங்கைநிறை
துன்னுதிரை சுரியன்மின்னுப்
பையரா வாழைஞெண் டிலவரால் துலைபந்து
பவளநிறை முத்தமாம்
பஞ்சூட்டு மிலவமு மணந்தன்ன நடைவாய்த்து
பைம்பொனோ வியநிகர்க்கும்
தெய்வயா னைக்குமொரு வள்ளிக்கு மணவாள
சிறுதே ருருட்டியருளே
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டியருளே.
99வேறு✓
பலகலை யுந்தழை வேய்த விசும்பறை
பட்டார் காவாழப்
பகன்மண் டிலமொடு விண்டல மீதெழு
பணிமண் டிலநிலவக்
கலக மிடும்பகை நிசிசரர் சால
கடங்கடர் கிளையகலக்
கங்கா நதியுட னிமையம டக்கொடி
கண்டுக ளித்தாட
வலகில் சராசரம் யாவையு மலிவுற
வாரண நிலையெய்த
வறநா லெட்டுந் திசையெட் டினுமக
வாயிர பலகோடி
யுலகமெ லாம்வள ரச்சுடர் வேல
னுருட்டுக சிறுதேரே
யுயர்மயி லைக்கிரி வந்தருள் கந்த
னுருட்டுக சிறுதேரே.
100✓
அபைய மெனத்தே வரைமூ வரைவரை
யாசையு ரப்பவரை
யந்தணர் முத்தீ முற்றத் தாக்கி
யமைத்தருள் பிறவாக்ய
வபையை யிலத்தையை தந்து நிரந்தரம்
வந்தனை செயுமன்பர்
மதுரித் தமுதொழுகப் புரிகவிவரு
வரகவி னாவலர்தஞ்
சபைபுகு தப்புரி தண்ணளி செய்து
தடங்கண் பொழிகருணை
தனையும் மறியா துனையுங் குறியாத்
தமியேன் முடிமீதும்
உபய பதத்துணை வைத்த கிருபாகர
வுருட்டுக சிறுதேரே
வுயர்மயி லைக்கிரி வந்தருள் கந்த
னுருட்டுக சிறுதேரே.