மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
முத்தப்பருவம்6 / 11
மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் · திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
முத்தப்பருவம்
42✓
ஊனாறு கப்புவா யிப்பிமுத் துப்புறு
மும்பறரு முத்தம் யாளி
யுகிரினா லூறுபடும் வேய்முத்த மெரிகதுவு
முரகன்வாய் முத்த மாலந்
தானாறு மதிமுத்த மறுவுண் டிருக்குஞ்
சலஞ்சலந் தருமுத்தமுந்
தாளதா மரைமுத்த மும்பங்க மெய்துமவை
தாமெவையும் யாம்வி ரும்பேந்
தேனாறு சந்தனப் பூனாறு சோலைசூழ்
தென்மயிலை தழைய வந்து
சிவஞான தேசிகற் கோதுமொரு மொழியுடன்
செல்வியுமை யவள்தி ருமுலை
பானாறு செங்குமுத வமுதச் செழுங்கனிப்
பவளவாய் முத்த மருளே
பருதிவெயில் விடுபசுங் குருதிவடி வேலவா
பவளவாய் முத்த மருளே.
43✓
கச்சுலா மிணைமுலை சுரந்தபா லமுதூட்டு
கார்த்திகை தனக்கொ ருக்காற்
கமலப் பணித்தொட்டி லிட்டழே லெனதோட்டு
கங்கைநங் கைக்கொ ருக்கா
லிச்சையா ளிளவெநீர் வார்த்துதன் னுத்தரிய
மொத்தியீ ரம்பு லர்த்தி
யிருநிலக் காப்பணிந் துச்சிக்கு நெய்பூசி
யெரிமணிச் சுட்டி கட்டிச்
செச்சைமா லிகைபுனைந் தாகத்தனைத் தெங்கள்
செல்வமே யிருகண் மணியே
தெள்ளமுத மேயெனச் சீராட்டு பனிவரைச்
செல்வவன் னைக்கொடுக்காற்
பச்சைமேற் காரங்கு லாவுமயி லைச்சயில
பவளவாய் முத்தமருளே
பகுதிவெயில் விடுபசுங் குருதிவடி வேலவா
பவளவாய் முத்தமருளே.
44✓
ஆலிக்கு மன்பினால் வள்ளிதன தடமேந்தி
யசையுமிடை யொருக ணோக்க
வவளடியில் வன்பர லுருத்தாம லிருகண்க
டான்பார்த்து முன்ன டப்ப
வேலிக்கு மதயானை வெண்கோடு நட்டதினை
விளைகொல்லை யொருக ணோக்க
வேளையொரு கண்பார்க்க வொருகண்வே டரைநோக்க
விழிமொழிவ திருகண் வினவக்
கோலிக்கு மதுரமூ ரதரந் துடிப்பது
குறிப்பவோ ரிருகண் வாரக்
கும்பப் படாமுலைப் புளகநோக் கக்கலை
குலைந்ததொரு விழிபார்த் துமா
பாலிக்கு மகமகிழ முருகமயி லச்சயில
பவளவாய் முத்த மருளே
பகுதிவெயில் விடுபசுங் குருதிவடி வேலவா
பவளவாய் முத்த மருளே.
45✓
கோடல்கமழ் சாரற் கொடிச்சியர் சிலம்பினெதிர்
கூவுகுர லொருசெ வியினா
குன்றுதவ ழருவியொலி யொருசெவியி னாற்களிறு
குளிறுகுர லொருசெ வியினா
லாடல்மயில் கதுவுமிசை யொருசெவியி னாலுழுவை
யார்ப்பரவ மொருசெ வியினா
லடல்வேட ரிரலையார்ப் பொருசெவியி னாற்கவ
ணதிர்ப்புழற் றொருசெ வியினா
லோடலென யோதுமுறை யொருசெவியி னால்வீணை
யொருசெவியி னார்ப்பு னந்தோ
றோலமென வொருசெவியி னால்முருகி யத்தமா
மொருசெவியி னால்வள் ளிதன்
பாடலொரு செவியினா லேற்குமயி லச்சயில
பவளவாய் முத்த மருளே
பகுதிவெயில் விடுபசுங் குருதிவடி வேலவா
பவளவாய் முத்த மருளே.
46வேறு✓
வழியும் பசுந்தேன் பெய்ததினை
மாவிற் கேக்கத் தொருகுறத்தி
வளைக்கை யதனில் வாங்காமல்
மலையான் முலையா டரச்சுரந்தே
பொழியு மிரதமது தருவோம்
புதுப்பூங் காந்தள் புனையாமற்
பொன்பூத் தலர்ந்த கற்பகப்பூம்
போது புனைவோ மிவையல்லாற்
குழியும் வழியுந் திரிந்துகவி
கூறிக் கவிதை கொள்ளாமற்
கோடா துனக்கே தொழும்புபுரி
கோமான் வயித்திய னாதனன்பால்
மொழியுந் தமிழு முனக்கணிவோ
முதல்வா முத்தந் தருகவே
முகுந்தன் மருகா மயிலமலை
முருகா முத்தந் தருகவே.
47✓
சுற்றுங் கடலுங் குலகிரியுஞ்
சூழூ நேமிப் பெருவரையுஞ்
சுடரா தபனும் நிசாசரனுஞ்
சொல்லும் வேதத் தொகுதிகளும்
பற்றுஞ் சமய நெறியாறும்
பார்நீர் முதலா மைம்பூதப்
பரப்பு மடையுங் கதிநான்கும்
பாசத் திரையுமு மெழுத்தைந்தும்
மற்று மாறா தாரமுடன்
வழிக ளாறுந் தத்துவத்தின்
வகையா றாறு மான்மாவும்
வகுத்த கால மொருமூன்றும்
முற்றுங் கலந்துங் கலவாத
முதல்வா முத்தந் தருகவே
முகுந்தன் மருகா மயிலமலை
முருகா முத்தந் தருகவே.
48✓
பழுத்த நேச வடியர்செழும்
பாலே மதுரப் பசுந்தேனே
பாகே யோகை தருமமுதே
பலவின் வடித்த கொழுங்கனியே
வழுத்த வரிய பேரொளியே
வாழ்வே தூண்டா மணிவிளக்கே
மாறாக் கருணை பெருக்காறே
மனமுங் கடந்த சுகோதயமே
யழுத்த முடைய குணக்குன்றே
யருவே யுருவே யருவுருவே
யகண்டா கார சின்மயமே
யழியா வின்ப மகோததியே
முழுத்த சோதி யிளங்கதிரின்
முனையே முத்தந் தருகவே
முகுந்தன் மருகா மயிலமலை
முருகா முத்தந் தருகவே.
49வேறு✓
கனியை யமுதுட னளவி யேனவர்
கவிதை சொலவருள் வைத்தவா
ககன தலைநிலை புகுத வொருவழி
கடவு ணுதல்விழி பெற்றவா
வினிய தமிழொடு சகல கலைகளு
மெளிதி னுதவிய வித்தகா
வெனது மனமதின் மருவி யனுதின
மினிதி னுறைதரு மற்புத
பனிவெண் மதிரவி யவனி புனலனல்
பவனம் வெளியுயிர் மெய்ப்பரா
பழைய மதுரையின் மணியின் விலைதெரி
பவர்கள் குலபதி வர்த்தகா
வனிதை பரைசிவை மதலை யெனவரு
மைந்த பணிமணி முத்தமே
மயில மலைவரு முருக வரிதிரு
மருக பணிமணி முத்தமே.
50✓
தகுவர் வயிறெரி தவழ வடல்புரி
சமர வயில்விடு கொற்றவா
சனகன் முதலிய முனிவர் தவநிலை
தழைய விழைவுசெய் மெய்த்தவா
புகலி நகரியின் மதுர கவிபொழி
புகரில் கவுணிய விற்பனா
புலவு கமழ்கணை யெயினர் குலமகள்
புளக முலைபுணர் உத்தமா
திகுதி திகுதிதி திகுதி செககண
செகண வெனுமயி னிர்த்தகா
திமிர தினகர நிகர திரிபுர
தகனர் புனைபுனி தச்சடா
மகுட மணியென னிலவு பதயுக
வனக பணிமணி முத்தமே
மயில மலைவரு முருக வரிதிரு
மருக பணிமணி முத்தமே.