முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
அலகிலாச் சூரியர்க2 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

அலகிலாச் சூரியர்க

1ஆசிரிய விருத்தம்✓
அலகிலாச் சூரியர்க ணிலவல்போற் ப்ரகாச
மானபொன் மேனியழகும்
ஆறுகுண மானமுக மாறுமுடி யாறுமீ
ராறுநற் கருணைவிழியும்
இலகுசீர்க் குறுமுறுவ லுஞ்சிறிது மஞ்சிடே
லீகுவா மருளையென்றே
இயையபய வரதமோ டெஃகமுத னற்படைக
ளேந்துமீ ராறுகரமும்
உலகெலாந் தொழுமுபய கிண்கிணிச் சீறடியு
முலவாத பட்டுடையுமாய்
ஒளிருமயில் வாகனத் தேறிநின் மடமாத
ரோடுகண் குளிரவருவாய்
விலகிடாச் செயலினா லடியனே னிதமுமுனை
வேண்டிப்பு கழ்ந்துதொழுவேன்
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே.