முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
பொல்லாத வஞ்சகப்7 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

பொல்லாத வஞ்சகப்

6✓
பொல்லாத வஞ்சகப் புல்லறிவி னேனையிப்
புன்மொழி பிதற்றுவேனைப்
பொறையிலா மூர்க்கனைக் கறையுலாந் தூர்த்தனைப்
பொய்ம்மொழிகள் பேசுவேனை
நல்லார்கள் கூட்டமன் றல்லார்கள் கூட்டமே
நாடுகூட் டுறவினேனை
நன்றுசெய வொருநாளு மொன்றிடாப் புத்தியிடை
நட்புமிக வைத்துள்ளேனை
எல்லாரு மெந்நாளு மாகொடிய னோபழிக
ளெண்ணாதி யற்றுபாவி
யென்றுகுறை கூறவே நின்றபழி காரனெனை
யீடேற்று நாளுமுளதோ
வில்லாரு மதிவதந நல்லார்க ளந்தவிரு
மெல்லியர்க் கேற்றகணவா
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே....