முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
கண்ணார நோக்கியும்11 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

கண்ணார நோக்கியும்

10✓
கண்ணார நோக்கியும் வாயார வாழ்த்தியுங்
கருதிமன தாரவுனியும்
கருணா கரக்கடவு ணினதுபொன் வேலினைக்
கருதருஞ் செயலையதனால்
மண்மீதி யான்பல வரங்களு மடைந்துசீர்
வாழ்வுறீ நின்றுமவைமேல்
வைத்தபே ராசைபோய் மாமுகில்கொ லென்னவரு
வாரணத் தேறிவருமென்
கண்ணாள னேயடிய னானுனைச் சேர்வதெக்
காலமோ மிகமுதிர்ந்த
காதலான் மேனியுமெ னுள்ளமும் வாடினேன்
கருணைசெய் தாளவேண்டும்
விண்ணாளி சத்யலோ காதிபதி வைகுந்த
மேவுபதி யெவருமேத்த
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே...