முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
எந்நாளு மெனைவருத்3 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

எந்நாளு மெனைவருத்

2✓
எந்நாளு மெனைவருத் திடுவறுமை போக்கிநீ
யேர்கொணிலை வைப்பதெந்நாள்
இரவுபக லோயாது கவலையால் வாடுமென்
னிருதயங் குளிர்வதெந்நாள்
துன்னார்த மிடையூறு நீக்கியனு கூலநீ
துணையிலேற் கருள்வதெந்நாள்
தொலையாம லெனைநிதம் பீடிக்கு நோயறச்
சுகமதைத் தருவதெந்நாள்
அஞ்ஞான திமிரமற நல்லறிவு கூட்டியே
யடியெனைக் காப்பதெந்நாள்
அமரரொடு முனிவர்முதல் யாவரும் போற்றிநின்
றர்ச்சிக்கு மேகமுதலே
மெய்ஞ்ஞான வுததியே நிதிபொழியு மேகமே
விரவுசுக வெள்ளமேசீர்
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே.