முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
பயமொன்று சுடுகாட்டி8 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

பயமொன்று சுடுகாட்டி

7✓
பயமொன்று சுடுகாட்டி னடமாடு பேய்களைப்
பாவியா னொப்பனையோ
பயன்பெறற் காலையிடை யிட்டுப் பிழிந்திடும்
பைங்கரும் பினையுமொப்பேன்
நயநின்ற கார்க்கடலி னலைதுரும் பாகிமிக
நானலைத னீயறிகுவாய்
நல்குரவு வன்பிணி பகைத்துயர்க ணாளூக்கு
நாண்மாறு மாறுமென்றே
இயல்கின்ற நம்பிக்கை யோரொருக் காலுறீஇ
யெளியனைத் தேற்றலன்றி
இகமிதிற் சுகமுறப் பெறுகிலே னொருநாளும்
யானிலவு காத்தகிளியாய்
வியனொன்று மெத்தொழிலி னும்பிரதி கூலமே
மேவிடற்கா வென்விதியோ
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே...