முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
வேண்டுவார் வேண்டுவதை9 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

வேண்டுவார் வேண்டுவதை

8✓
வேண்டுவார் வேண்டுவதை வேண்டியாங் கருளுமியல்
விண்ணவா நின்றனருள்கூர்
வேலாயு தப்பெருமை யென்னெனப் புகழுவேன்
மெய்யடியர் மாத்ரமேயோ
ஆண்டுசே ரெவருமது காண்டலும் மஞ்சலித்
தன்பினால் விம்மிவிம்மி
யனலிடைப் பட்டதோர் மெழுகுபோன் மனமுருகி
யாநந்த வருவிபொழிய
நீண்டதண் டாகார மாய்விழுந் தெழீஇயவ
ணினைந்துதோத் திரமுரைப்பார்
நினதுசித் கூத்தெலாம் பலருமானு பவத்திலே
நெடுநா ளறிந்ததன்றோ
வீண்டொழா ரெவருமுங் கென்னுமிதி னாற்றிடம்
மேவியான் றொழுதுநின்றேன்
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே...