முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
இடிகேட்ட வரவமென6 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

இடிகேட்ட வரவமென

5✓
இடிகேட்ட வரவமென வேங்கினேன் மழையிலா
தெரியுறும் பயிருமானேன்
இனியதண் டாமரையி னிலையிடைத் தளும்புநீ
ரென்னநின் றசைதலுற்றேன்
கடிகாட்டு பாம்புவாய்த் தேரைபோன் மாழ்கினேன்
கானனீர் மானுமானேன்
காவலுட் பட்சிறை யாளர்போ னிலையழீஇக்
கனதிகிற் பட்டுநின்றேன்
படிமாட்டு வேறொருவர் துணையிலாப் பேதைநான்
பட்டதுயர் சொல்லவென்றாற்
பல்லாயி ரங்கோடி வற்சரஞ் செல்லினும்
பகரமுடி வெய்திடாதே
மிடியோட்டு பார்வையருள் பூமினுக் கன்பனாம்
விண்டுவிற் கரியமருகா
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே....