முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
கிருபாலு வேசிற்10 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

கிருபாலு வேசிற்

9✓
கிருபாலு வேசிற் சுகோதய விலாசமே
கிளர்பெருஞ் செல்வமேசெங்
கேழுடைய நந்தத ரியருதய மேயமிர்த
கிரணநிரை வீசியழகி
னுருவாரு மளவிலாச் சந்திரர்த முத்யமே
யுண்ணவுண் ணத்தெவிட்டா
துற்றதண் ணமுதமே கற்பகச் சோலையே
யொளிர்காம தேனுவேபொன்
தருவார்ம லர்க்கணெழு செந்தே னளக்கரே
சங்கநிதி பதுமநிதியே
தகையசிந் தாமணிக் குவியலே யெனையிவட்
டந்துககாத் தருளுமுதலே
வெருவாத சிங்கமே யென்றென் றுனைப்பாடி
மேவுதற் கருள்புரிகுவாய்
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே..