முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
சுத்தமோ வில்லாத5 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

சுத்தமோ வில்லாத

4✓
சுத்தமோ வில்லாத வஞ்சக வசுத்தனான்
றுயநல புண்யமில்லாச்
சுத்தப்பெ ரும்பாவி யித்தரையி னான்பெருஞ்
சுமையையா யவதரித்தேன்
நித்தமுயர் வாழ்வுதரு கல்வியறி வில்லாத
நீர்மூட னானுயர்ந்த
நீள்பெருஞ் செல்வநற் பதவியி லுறாவறிய
நிலையினை யடைந்தவன்யான்
இத்தரையி லெப்பெரிய போகமு மிலாததனி
யேழைநா னுன்றனடியே
யென்றனக் குற்றதுணை யென்றுவந் தெய்தினே
னெளியனேற் கருளவேண்டும்
வித்தகக் கர்த்தனே சுத்தனே நித்தனே
மிளிருமெய் வாழ்வுதருவோய்
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே....