முருகன் App
நல்லைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
பூவுலகி லெனையீன்ற4 / 11
நல்லைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

பூவுலகி லெனையீன்ற

3✓
பூவுலகி லெனையீன்ற பொன்னனைய வன்னைநீ
போற்றியரு ளப்பனுந்நீ
பொங்குகலை ஞானமருள் சற்குருவு நீயுளம்
பூரித்த தெய்வமுந்நீ
பாவுலக மானநில நீர்நெருப் பொடுவாயு
பரவுமா காயமுந்நீ
பணியுமடி யார்நிதமு மேத்தித் துதித்திடும்
பரிதிமதி சீவனுந்நீ
மூவுலகு மாளிந்த்ர போகமருள் வோனுநீ
முராரியய னாக்குவோனீ
மொழியுமெய்ப் பத்தியும் புத்தியுஞ் சித்தியும்
முத்தியுட னீபவன்னீ
மேவுலக கோடிதமை யாக்கிவைத் தழித்திடும்
விண்ணவா சரணுனக்கே
மேயவிப் பாரிலே மிளிர்நல்லை யூரிலே
விரவும்வேற் சத்திதரனே...