முருகன் App
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
காப்பு1 / 11
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் · அந்தகக்கவி வீரராகவ முதலியார்

காப்பு

1விநாயகர் வணக்கம்✓
பேறாய கீரன்முற் பகருமுரு காரறெனப்
பெருகாறு கண்டுமுலகிற்
பேரருண கிரிதிருப் புகழ்கண்டு நாணாது
பெறுமவத் துறுமாசையால்
ஏறாய வாகனக் கடவுடன் மைந்தனுக்
கெமதுசெய் கைக்கந்தனுக்
கிளமைவள மைப்பிள்ளை யங்கவிதை நூலெழுத
வென்கரத் தாமரைதொழும்
ஆறாயி ரத்துமுக முடையது சடைக்கா
டமைத்தநா யகன்வருவிலாம்
அந்தமா மேருவிற் பந்தவே தங்குறித்
தறிவியா தன்கூறுநாள்
நூறா யிரத்தின்மே லிருபதை யாயிரங்
கவிதைநூ லகலமுழுதும்
நுதிமருப் பாலெழுது மொருவா ரணத்தினிரு
நூபுரத் தாமரையுமே